சிவகார்த்திகேயன் பட இயக்குநர் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் – டிஸ்கஷன் எங்க தெரியுமா ?

0
209
azeem
- Advertisement -

பிக் பாஸ் அசீம் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத் திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகர் அசீம். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து முடித்து மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வி.ஜே.வாக தான் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
azeem

இந்த சீரியல் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி 2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதன் பின் இவர் கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

அதற்குப் பிறகு அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இவர் ஏற்கனவே சீசன் 4-இல் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டு சீசன்கள் கழித்து ஆறாவது சீசனில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அசீம் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுதியிருந்தது.

பிக் பாஸ் வெற்றியாளர் அசிம்:

இதனால் கமல் பலமுறை அசீமிற்கு வார்னிங் கொடுத்திருந்தார். இதனால் இவர் இறுதி வரை வருவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வியாகவே இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல் சொல்வதற்கு ஏற்ப அசீம் டைட்டில் பட்டதை வென்று இருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சிக்கு பின் அசீம் மக்கள் நாயகன் என்ற பட்டத்தை தனக்குத்தானே போட்டுக்கொண்டு எல்லா இடங்களுக்கும் ஒரே மாதிரியான ஆட்களை அழைத்துக் கொண்டு வெற்றி கோப்பையும் எடுத்துக்கொண்டு போட்டோ எடுக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் அவரை விமர்சித்து இருந்தார்கள். இந்நிலையில் அசீம் ஹீரோவாக நடிக்க இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் தான் அசீம் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

அசீம்-பொன்ராம் கூட்டணி:

இயக்குனர் பொன்ராம் அவர்கள் சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து டிஎஸ்பி போன்ற படங்களை இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து தற்போது இவர் பிக் பாஸ் அசீமை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது அசீமும் பொன்ராமும் ராஜஸ்தானில் இருக்கிறார்கள். திரைப்படம் குறித்து தான் இருவரும் டிஸ்கஷன் செய்வதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை முக்கிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் அசீம் மற்றும் இயக்குனர் பொன்ராம் சென்னை திரும்பியவுடன் படம் குறித்த விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement