தன்னுடைய பெயர் மாற்றம் தொடர்பாக ஆர்.ஜே பாலாஜி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர்.ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி ‘புத்தகம்’ என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பாலாஜி பிரபலம் ஆனார். அதன் பின் எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர்.ஜே பாலாஜி ஹீரோ ஆனார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.
ஆர்.ஜே.பாலாஜி குறித்த தகவல்:
இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. நயன்தாரா முதன் முதலாக அம்மன் வேடம் அணிந்து இந்த படத்தில் தான் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் ஆர்.ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். சாமி பெயரை சொல்லி ஏமாற்றும் போலி சாமியார்கள், சாமி நம்பிக்கையால் ஏமாறும் மக்கள் போன்றவற்றை மையாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.

சூர்யா 45 படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக இருந்தது. ஆனால், இந்த இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி தான் இயக்கி வருகிறார். தற்போது ஆர்.ஜே பாலாஜி அவர்கள் சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முன்பு மௌனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் சூர்யா-த்ரிஷா இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.
View this post on Instagram
பெயர் மாற்றம் :
இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே பாலாஜி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். ஜி.கே வி விஷ்ணு இந்த படத்திற்கு ஒளி பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. .
https://www.youtube.com/watch?v=ixt87LAt9QM
ஆர்.ஜே.பாலாஜி விளக்கம்:
இதற்கு முன்பு இந்த படம் தொடர்பான போஸ்டர்களில் ஆர்.ஜே பாலாஜி என்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியாகிருக்கும் போஸ்டரில் ஆர்ஜேபி('RJB') என்று மாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி மேம், எனக்கு போன் செய்து ஆர்.ஜே பாலாஜி என்று போடாதே. ஆர்ஜேபின்னு போடு என்று சொன்னார்கள். பெரியவங்க பெயர் எல்லாம் சொல்லி அவங்க பேர் எல்லாம் மூன்று எழுத்து. அதே மாதிரி நீயும் வைத்துக்கொள். அடுத்த படத்தில் இருந்து பெயரை மாத்திடு என்று சொன்னார்கள். நியூமராலஜி படி ஊர்வசி மேம் சொல்வது சரியாக தான் இருக்கு என்று எனக்கும் தோன்றியது. ஆனால், கொஞ்சம் எனக்கு கூச்சமாக தயக்கமாக இருந்தது. அடுத்த படத்திலிருந்து 'ஆர்ஜேபி'னு மாற்றிடலாம் என்று சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.






