சிம்புவின் பாலாபிஷேக விவகாரம்.! சிம்புவை கிண்டல் செய்த ஆர் ஜே பாலாஜி.!

0
674
Rjbalaji
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது படங்களுக்கு பாலபீஷேகமோ, அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கவோ வேண்டாம் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருக்கு பல பாராட்டுக்கள் குவிந்தது. 

-விளம்பரம்-

அதே போல சிம்புவுக்கு எங்கே ரசிகர்கள் இருக்கின்றனர் என்று சமூக வலைதளத்தில் பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் இதுகுறித்து சிம்பு மீண்டும் ஒரு விடியோவை வெளியிட்டார். அதில் தனது படத்திற்கு பேனர் வைக்கும்படியும் அண்டா கணக்கில் பாலபிஷேகம் செய்யும்படியும் தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ சிம்புவை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜியும் சிம்புவை கிண்டல் செய்துள்ளார். ஆர் ஜே பாலாஜி தற்போது ‘எல் கே ஜி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடம் வரும் குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆர் ஜே பாலாஜியின் இந்த பதிவிற்கு ட்விட்டர் வாசி ஒருவர்,
படம் ரீலீஸ் அகட்டும் உன் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் பன்னிடுறேன் என்று கமண்ட் செய்திருந்தார். அதற்கு பாலாஜி சிறிதும் கோபபடாமல், என்று சிம்புவை கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் பாலாஜி மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement