திவ்யா கணேசனுடன் நிச்சத்தோடு நின்ற திருமணம் – வேறு ஒருவரை திருமணம் முடித்த ஆர் கே சுரேஷ். அதுக்குள்ள மகளுக்கு இப்படி ஒரு பங்க்ஷனா.

0
15132
rk
- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள் அதேபோல ஒரு சில நடிகர்கள் தங்களது பலத்தை தாங்களே தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர் ஆனால் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விடிவு சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்தவர் ஆர்கே சுரேஷ்.

-விளம்பரம்-

தர்மதுரை படத்தில் இடம்பெற்ற மக்க கலங்குதப்பா என்ற பாடலிலும் தோன்றியிருந்தால் ஆர்கே சுரேஷ். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரா தப்பட்டை’ விஷால் நடிப்பில் வெளியான ‘மருது’ போன்ற படத்தில் வில்லனாக மிரட்டிய ஆர் கே சுரேஷ் கடந்த ஆண்டு வெளியான ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் ஆர் கே சுரேஷுக்கு சீரியல் நடிகை திவ்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையும் பாருங்க : ‘எனக்கு இது தான் ஆதங்கம்’ – தேசிய விருது பெற்றாலும் நிறைவு அடையாத பார்த்திபன் – ஏன் பாருங்க.

- Advertisement -

ஆனால், திருமணம் நின்றுவிட்டதாக திவ்யா அறிவித்து இருந்தார்.இதுகுறித்து திவ்யா கூறிய போது, அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை வர வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம்.இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறி இருந்தார் திவ்யா.

இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும்  கடந்த ஆண்டு அக்டொபர் மாதம் ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்கள் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் தன் மகளுக்கு முதல் மொட்டை அடித்துள்ளார் ஆர் கே சுரேஷ். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement