அத கேட்ட உடனே தல ரசிகர்கள் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க – மேடையில் இந்துஜாவை எச்சரித்த RK சுரேஷ்.

0
269
rksuresh
- Advertisement -

நடிகை இந்துஜாவுக்கு எச்சரிக்கை விடுத்து ஆர் கே சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் ஆர்கே சுரேஷ். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தர்மதுரை போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பின் இவர் படங்களில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தற்போது இவர் ஹீரோவாக கலக்கி கொண்டு வருகிறார். இதனிடையே ஆர்கே சுரேஷ் அவர்கள் சினிமா பைனான்சியர் மது என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரேயா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஆர் கே சுரேஷ் இரண்டாவது முறை தந்தையாக இருக்கிறார்.

- Advertisement -

ஆர் கே சுரேஷ் நடித்த படம்:

மேலும், இவர் இயக்குனர் பத்மகுமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த விசித்திரன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஜோசஃப் படத்தின் தமிழ் ரீமேக். மலையாளத்தில் ஜோசஃப் படத்தை இயக்கிய இயக்குனர் பத்மகுமார் தான் தமிழில் விசித்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இதில் பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

ஆர் கே சுரேஷ் அளித்த பேட்டி:

இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை இந்துஜா குறித்து ஆர் கே சுரேஷ் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஆர் கே சுரேஷ் அவர்கள் பட விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் இந்துஜா குறித்து கூறியிருந்தது, ஒரு நடிகையின் பேட்டி ஒன்று பார்த்தேன்.

-விளம்பரம்-

இந்துஜா குறித்து சொன்னது:

அவர் பெயர் இந்துஜா. பில்லா பாண்டி படத்தில் அவர் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அவரிடம் நீங்கள் நடித்ததிலேயே மோசமான படம் எது என்று கேட்டிருக்கிறார்கள். அவர் கொஞ்சம் யோசித்து பில்லா பாண்டி என்று சொன்னார். இதைக் கேட்ட உடனே தல ரசிகர்கள், நம்ம மோச போயிட்டோம் தலைவா என்றெல்லாம் கமெண்ட்ஸ் போட்டிருந்தார்கள். அந்த படம் ஒரு மிக அருமையான கதை. நான் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படத்தில் அதுவும் ஒன்று.

பில்லா பாண்டி படம்:

நான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லவில்லை. ஆனால், நம்முடைய வளர்ச்சி முன்னேற்றத்திற்கு எது உறுதுணையாக இருக்கிறதோ அதை எந்த உயரத்துக்கு போனாலும் மறந்திடக் கூடாது என்று இந்துஜாவை குறித்து பேசி இருந்தார். இயக்குனர் சரவணா சக்தி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் பில்லா பாண்டி. இந்த படத்தில் ஆர் கே சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகி பாபு, இயக்குனர் மாரிமுத்து உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை ஆர் கே சுரேஷ் தயாரித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடிகர் அஜித்தின் ரசிகராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement