வாழை இலையில் வரவேற்பு அலங்காரம், சிம்பிளாக நடந்த ரோபோ ஷங்கர் மகளின் நிட்சயதார்த்தம். மாப்பிள்ளை யார் தெரியுமா?

0
500
- Advertisement -

ரோபோ சங்கர் மகளின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக நடித்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் முன்னணி நடிகர்களான இவர் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்

- Advertisement -

ரோபோ ஷங்கர் மகள்:

அதில் ஒரு மகள் இந்திரஜா அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனையாக ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியாவில் இந்திரஜா:

மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.
இதை பார்த்து ரசிகர் அவர் உங்களது முறை மாமனா? அவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இந்திரஜா, ஆமாம், திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

திருமண நிச்சயதார்த்த நிகழ்வு:

திருமணம் செய்யப் போகிறார்கள் என்று தெரிந்ததிலிருந்து இந்திரஜா ‘மாமா’ என்ற கேப்டன் உடன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார். இவர் திருமணம் செய்யும் நபர் கார்த்திக். இவர் மதுரை சேர்ந்த தொடர்வோம் என்ற அமைப்பின் நிறுவனர். தற்போது இவர் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் ரோபோ சங்கரின் உறவினர் ஆவார்.

திருமணம் குறித்த தகவல்:

இந்த நிலையில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்த நிகழ்வு இன்று நடைபெற்றிருக்கிறது. இதில் ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் கலந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்தி ரஜா- கார்த்திக் தம்பதியை பலரும் வாழ்த்தி இருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் கூடிய விரைவில் நடப்பதாகவும் அதில் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement