Date இன்னும் Fix பண்ணல, பண்ணதும் சொல்றேன் – தன் திருமணத்தை பற்றி அறிவித்த ரோபோ சங்கர் மகள். மாப்பிள்ளை இவர் தான்.

0
3353
- Advertisement -

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் சென்று இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர்.

-விளம்பரம்-

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொலைக்காட்சியில் டிவி மூலம் பல்வேறு கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா திரைக்கு அறிமுகமானார்.

- Advertisement -

ரோபோ ஷங்கர் திரைப்பயணம்:


ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் அதன் நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர்

ரோபோ ஷங்கர் மகள்:

அதில் ஒரு மகள் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் சில படங்களில் கமிட்டாகி நடிப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் இந்திரஜா:

மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தன்னுடைய முறை மாமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

திருமணம் குறித்து சொன்னது:

இதை பார்த்து ரசிகர் அவர் உங்களது முறை மாமனா? அவரை தான் நீங்கள் திருமணம் செய்ய போகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இந்திரஜா, ஆமாம். திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்று கூறியிருக்கிறார். இப்படி இந்திரஜா அளித்திருக்கும் பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement