ஏன் கைதட்ட மாட்றீங்க.! வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ரோபோ சங்கர்.!

0
810
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலித்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர். தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் ரோபோ சங்கர், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for robo shankar mr local

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரெஸ் மீட் ஒன்று பட குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பேசிய ரோபோ ஷங்கர், நான் பிரெஸ் மீட்க்காக போடும் ஷோ என்றால் நான் வருவதே இல்லை. பிரெஸ் மீட்க்கு போடும் ஷோ என்றால் அவர்கள் சிரிப்பதே கிடையாது. நல்ல காமெடியை கூட அவர்கள் முறைத்து தான் பார்க்கிறார்கள். இப்போ இங்கே இயக்குனரும், ஹீரோவும் வந்திருக்கிறார்கள் ஒரு நாகரித்தீற்க்ககா கூட அவர்களை வரவேற்று ஏன் யாரும் கைதட்டவில்லை என்று பேசி இருந்தார்.

- Advertisement -

ரோபோ சங்கரின் இந்த பேச்சுக்கு பதில் அளித்த பத்திரிகையாளர்கள் இது ஒன்றும் ஆடியோ வெளியிட்டு விழாவோ, டீசர் வெளியீட்டு விழாவோ இல்லை. இது பிரெஸ் மீட் தான். அதுமட்டுமில்லாமல் நாங்கள் படத்தை பார்ப்பவர்கள் இல்லை படத்தை கவனிப்பவர்கள் அதனால் நாங்கள் கைகளை தட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Image result for robo shankar mr local

இதே பத்திரிகைகள் தான் ரோபோ சங்கர் உதவிய போதெல்லாம் செய்திகள் வெளியிட்டது என்று தெரிவிக்கபட்டது. பின்னர் பேசிய ரோபோ சங்கர் நான் பேசியதை கொழந்தையாக நினைத்து மன்னித்து விடுங்கள் நான் கேட்க வேண்டும் என்று தோன்றியதால் கேட்டேன் என்று கூறினார். இதற்கு பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், அண்ணே இது ரசிகர் கூட்டம் இல்லண்ணா பிரஸ் மீட் என்று ரோபோ சங்கரை கிண்டலடித்தார்.

-விளம்பரம்-
Advertisement