அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் ரீதியாக இந்த படம் வெற்றியை கண்டுள்ளது. நயன்தாரா விவேக் யோகிபாபு டேனியல் பாலாஜி கதிர் இந்துஜா என்று பல்வேறு முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு சில புதுமுக நடிகைகளின் அறிமுகமாகிஇருந்தார்கள் அந்த வகையில் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும் ஒருவர். இந்த நிலையில் நடிகை இந்திரஜாவின் தாய் மாமன் தீனா என்ற தகவல் தற்போது தான் தெரியவந்துள்ளது.

Advertisement

கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா. விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதுவரை ஜில் ஜங் ஜக், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் தீனா. மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீனாவிற்கு பிறந்தநாள் சென்றுள்ளது. அப்போது தான் தீனா, இந்திரஜாவின் தாய் மாமன் என்பது இந்திரஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : சரியாக ‘டகால்டி’ வேலையை செய்து ரசிகர்களை கவர்ந்தாரா சந்தானம்-முழு விமர்சனம் இதோ.

தீனாவின் பிறந்தநாளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்தை தெரிவித்துள்ள இந்திரஜா. உங்களை முதல் முதலில் பார்த்பொழுது கூப்பிட்ட வார்த்தைதான் இந்த நொடிவரைக்கும் கூப்பிடுகிறேன் “அப்பா”. தாய் மாமன் என்ற உறவு தாயுக்கும் மேலானவர். என் சந்தோஷத்தை எனக்கு திருப்பி தந்த என்னவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  உங்கள் கரங்களை நான் எப்போதும் விடமாட்டேன் ஏனென்றால் நீங்கள் என்னுடைய அப்பா. லவ் யூத் அப்பா என்று மிகவும் உருக்கமாக தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் இந்திரஜா.

Advertisement

இந்திரஜாவின் பதிவிற்கு பின்னரே நடிகர் தீனா, ரோபோ ஷங்கரின் மனைவியின் தம்பி என்பது பலருக்கும் தெரியவர ரசிகர் பலரும் கொஞ்சம் ஆச்சர்யத்துடன் கமன்ட் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பிகில் படத்திற்கு பின்னர் இந்திரஜா அடிக்கடி பல்வேறு டிக் டாக் விடீயோக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும், ரோபோ ஷங்கரை விட இந்திரஜாவிற்கு தான் அதிக பட வாய்ப்புகள் வருவதாக ரோபோ ஷங்கர் பேட்டி ஒன்றில் கூட தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement