நடிகர் சந்தானம் அவர்கள் காமெடியனாக திரை உலகில் கொடி கட்டி பறந்தவர். சமீப காலமாக இவர் சினிமா உலகில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சந்தானம் அவர்கள் தில்லுக்கு துட்டு1, தில்லுக்கு துட்டு 2, ஏ1 போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து உள்ளார். தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் “டகால்டி”. இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி தூள் கிளப்பி வருகிறது.
இந்த படம் ஆக்ஷன்,காமெடி, காதல் என எல்லாம் கலந்த கலவையாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ரித்திகா சென் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து உள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்து உள்ளார். சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் மற்றும் எஸ்.பி.சௌத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள். இந்த படத்தில் யோகிபாபு, சந்தானம் இணைந்து நடித்து உள்ளார்கள். இவர்களுடன் பிரம்மானந்தம், மனோபாலா, சந்தான பாரதி போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு விஜய் நாராயணன் இசை அமைத்து உள்ளார்.
இதையும் பாருங்க : நான் எதிர்பார்த்த மாதிரி பொண்ணு கெடச்சிடுச்சி, நானும் மாப்பிள்ளை ஆகிட்டேன்- யோகி பாபு குஷி.
கதைக்களம்:
சந்தானம் அவர்கள் மும்பையில் பல ஏமாற்று, டகால்டி வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருபவர். அதே ஊரில் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருப்பவர் சாம்ராட். சாம்ராட் அவர்களுக்கு தன் மனதில் தோன்றிய ஒரு பெண் உருவத்தை வரைபவர். பின் அந்தப் பெண்ணை இந்தியாவில் எங்கு இருந்தாலும் கொண்டு வந்து ஆசையை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று நினைப்பவர். இப்படி இவர் ஒரு பெண்ணை வரைந்து அந்த பெண்ணை இந்தியா முழுவதும் உள்ள ரவுடிகளிடம் தேட சொல்லி கூறுகின்றார்.
அந்த சமயத்தில் மும்பையில் டானாக இருப்பவர் ராதாரவி. அவரிடம் தொழில் ரீதியாக வேலை செய்பவர் தான் சந்தானம். பின் ராதாரவி இடம் இந்த பெண்ணை தேட சொல்லி கூறுகிறார்கள். ராதாரவி அதை சந்தானத்திடம் கொடுத்து இந்த பெண் எங்கே இருந்தாலும் கொண்டு வா என்று உத்தரவிடுகிறார். அப்போது சந்தானம் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து விட்டு இந்தப் பெண் எனக்கு நன்றாகவே தெரியும். இந்த பெண்ணை ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்கிறேன் என்று கூறுகிறார்.
இதையும் பாருங்க : நடிகர் மோகன் லாலுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா. புகைப்படம் இதோ.
பின் மும்பையில் இருந்து அந்த பெண்ணை தேடி தமிழ் நாட்டிற்கு செல்கிறார். அந்தப் பெண்ணுக்கு சினிமாவில் மிகப் பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசை. அதை பயன்படுத்தி சந்தானம் அந்த பெண்ணை தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு அழைத்து செல்கிறார். அந்த பெண்ணை சந்தானம், ராதாரவியிடம் சொன்னது போல் ஒப்படைகிறாரா? அந்த மிகப்பெரிய பணக்காரர்கனின் எண்ணம் நிறைவேறியாதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை. இதற்கு இடையில் நடக்கும் ஆக்ஷன் கலந்த காமெடி தான் படத்தின் சுவாரசியமே.
படத்தில் சந்தானத்தின் ஒன்லைன் கவுண்டர் எல்லாம் வேற லெவல் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் சந்தானம் காமெடி மட்டும் இல்லாமல் யோகிபாபுவும் களத்தில் இறங்கி சும்மா அதிர வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு வரும் போது நடக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தூள் கிளப்பியிருக்கிறது. படம் முழுக்க முழுக்க காமெடிக்கு பஞ்சமே இல்லை. ஹீரோயினின் காமெடி, பேசும் வெகுளித்தனம் ரசிகர்களை கவர்ந்தது. இதுவே அவருக்கு முதல் படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார். படத்தின் ஒளிப்பதிவும், இசையும் பக்கம் பலமாக அமைந்துள்ளது.
பிளஸ்:
சந்தானம் இந்த படத்தை முடிந்த அளவிற்கு சூப்பராக கொண்டு சென்று உள்ளார்.
இந்த படத்தில் இரண்டு காமெடி நடிகர்களின் காமெடி கலக்கல்.
தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் கிளைமாக்ஸ் காட்சிகளில் வந்தாலும் மக்கள் மனதை கொள்ளை அடித்து விட்டார்.
படத்தின் ஒளிப்பதிவு, இசை எல்லாம் சூப்பர்.
படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை காமெடிக்கு பஞ்சமே இல்லை.
மைனஸ்:
கதை நன்றாக இருந்தாலும் லாஜிக் மீறல் எல்லாம் படத்தில் உள்ளது.
படத்தின் இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார் தான்.
இறுதி அலசல்:
ஒரு பெண்ணை அடைய நினைக்கும் கும்பலில் இருந்து எப்படி போராடி சந்தானம் அந்த பெண்னை காப்பாற்றுக்கிறார் என்பது படத்தின் கதை. மொத்தத்தில் “டகால்டி படம் — படத்தில் நல்ல டகால்டி வேலைகளை செய்து உள்ளது.