வயதானவர் என்று பாராமல் ரமணி அம்மாவை கலாய்த்த பிரபல தொலைக்காட்சி ! கோபத்தில் ரசிகர்கள்

0
10435
Ramani-Ammal-compressed

ஜி தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் ராக்ஸ்டார் ரமணியம்மா. இவருக்கு தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய அடுத்த படத்தில் பாட வைப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்று ராக்ஸ்டார் ரமணியம்மாவை கலாய்த்து நிகழ்ச்சி நடத்தியுள்ளது. அவர் பாடுவதை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக அந்த நிகழ்ச்சி இருக்கிறதாம். இதனால் ரமணியம்மாவின் ரசிகர்கள் அந்த பிரபல தொலைக்காட்சி மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர்.

இதற்கு முன்னர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ‘சொல்வதெல்லாம் பொய், மேல வைக்காத கை’ என்ற ஒரு காமெடி செய்து விஜய் டிவி, ஜி தமிழ் தொலைக்காட்சியை கலாய்த்தது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அவரை கலாய்த்திருக்கலாம் என மக்கள் சந்தேகப்படுகின்றனர்.