ராக்கி-கைதி படம் கிளைமாக்ஸ் ஒற்றுமை குறித்து விளக்கம் அளித்த ராக்கி இயக்குனர். வைரலாகும் வீடியோ

0
532
rocky
- Advertisement -

கைதி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அப்படியே ராக்கி படத்தில் வந்துள்ளது என்று சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள், விமர்சகர்கள் என பலரும் போஸ்ட் போட்டு விமர்சித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து தற்போது ராக்கி படத்தின் இயக்குனர் பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். நயன்தாரா– விக்னேஷ் சிவன் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ராக்கி. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா, ரோகினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ராக்கி படம் கதை:

மேலும், இந்த படத்தின் பிரமோஷனில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா காலம் ஒரு துரோகி என்ற டைட்டில் பாடலில் தோன்றி நடித்து இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. ராக்கிக்கும், மணிமாறனுக்கும் இடையே நடக்கும் யுத்தம், பழிவாங்கும் உணர்வு தான் கதை. இதுவரை இல்லாத கேங்ஸ்டர் படத்தை கொஞ்சம் வித்தியாசமான முறையில் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

- Advertisement -

ராக்கி-கைதி படம் கிளைமாக்ஸ் விமர்சனம்:

பல எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு ராக்கி படம் நல்ல விருந்து என்று சொல்லலாம். ஆனால், படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் பல விமர்சகர்கள் ராக்கி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கைதி படத்தின் கிளைமாக்ஸை நினைவூட்டுகிறது என்று விமர்சித்து உள்ளார்கள். மேலும், கைதி படத்தையும் ராக்கி படத்தையும் ஒப்பிட்டு சோசியல் மீடியாவில் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராக்கி படத்தின் இயக்குனர் இது குறித்து தற்போது பேட்டியளித்துள்ளார்.

What is your review of Tamil Film - Kaithi? - Quora

விளக்கம் கொடுத்த ராக்கி பட இயக்குனர்:

அதில் அவர் கூறியது, கைதி படப்பிடிப்பை தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே நாங்கள் எங்கள் முழு படத்தையும் முடித்தோம். அதை நாங்கள் சென்சார் செய்தோம். அதுமட்டுமில்லாமல் நான் ராக்கி படத்தை பற்றி பலரிடம் கதை சொன்னேன். அதனால் நான் படம் ஒற்றுமை பற்றி கவலைப்படவில்லை. நான் பிற விவரங்களையும் பெற விரும்பவில்லை. கைதி படத்திற்கு ஒரு வருடம் முன்னதாகவே 2018ல் எங்கள் படத்தை முடித்தோம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

ராக்கி பட இயக்குனரின் அடுத்த படம்:

இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மேலும், ராக்கி படத்தினை தொடர்ந்து அருண் இயக்கத்தில் உருவான சாணி காயிதம் படமும் விரைவில் வெளியாகவுள்ளது. பிறகு அருண் மாதேஸ்வரன் தனுஷ்ஷை வைத்து படம் இயக்க போவதாக அறிவித்து உள்ளார். தனுஷ் நடித்த அத்ரங்கி ரே படம் OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வீடியோவில் 30 : 19 நிமிடத்தில் பார்க்கவும்

பின் தனுஷ் மாறன்,வாத்தி,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், வெற்றிமாறனுடன் ஒரு படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம், ஆயிரத்தில் ஒருவன் 2, சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு லிஸ்டே இருக்கிறது. இருந்தாலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் இணையும் படத்தினை உறுதி செய்துள்ளார். அந்த புது படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கடப்படுகிறது

Advertisement