ட்ராமா போட்டு மனோஜை ஏமாற்றிய ரோகினி, செல்வம் எடுத்த அதிரடி முடிவு- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
270
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் லெட்டர் கொண்டு வந்து கொடுத்து படிக்கச் சொல்லி மறைந்து விட்டார். அந்த கடிதத்தில் உன் தம்பி கொலையாளி ஆவான், நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று இருந்ததை பார்த்து மனோஜ் ரொம்ப பயந்து அந்த நம்பரை தேடி போனார். ஆனால், அவர் கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய மாமியாருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் முதியவர்கள் பசியால் இருந்ததால் அவர்களுக்கு போட்டு விட்டு விஜயாவிற்கு பிரியாணி வாங்கி கொண்டு போய் கொடுத்தார்.

-விளம்பரம்-

விஜயாவிற்கு பிரியாணி ஜீரணம் ஆகாமல் ரொம்ப அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்க, உடனே மீனா, முதியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த விசயத்தை சொல்ல, முத்து- அண்ணாமலை இருவருமே பாராட்டி இருந்தார்கள். பின் எல்லாரும் தூங்கிய பிறகு மனோஜ் தனக்கு வந்த கடிதத்தை தன் அம்மாவிடம் காண்பிக்க இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள். அந்த சமயம் வந்த ரோகினி, இதெல்லாம் ஒன்றுமில்லை விளையாட்டிற்காக யாரோ செய்த வேலை என்று சொல்லி சமாதானம் செய்தார். மறுநாள் மீனா, அந்த முதியவர்களுக்கு சாப்பாடு கொண்டு போய் தர, அதற்கு முன்பே முத்து அவர்களுக்கு வேலை கொடுத்து சம்பளமும் தந்தார் .

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

மேலும் செல்வம், பண கஷ்டத்தில் குடித்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய அப்பாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று செல்வம் கேட்க, நான் எப்படியாவது ரெடி பண்ணி தருகிறேன் என்று முத்து வாக்கு கொடுத்தார். பின் வீட்டில் முத்து, நடந்தை சொல்லி தனக்கு கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மீனாவிடம் கேட்கிறார். ஆனால், அவர் முடியாது, நமக்கு வீடு கட்ட வேண்டும் என்று அறிவுரை சொன்னார். முத்து என்ன செய்வது என்று புரியாமல் வருத்தத்தில் இருக்கிறார்.

சீரியல் கதை:

நேற்று எபிசோடில், ரோகினி தனக்கு ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்டார். உடனே அவர் ஷாக் ஆகி ஏன்? எதற்கு? என்று கேட்க, என்னுடைய தோழிக்கு ரொம்ப அவசர தேவை என்று ரோகினி சொன்னார். ஆனால், மனோஜ் முடியாது என்று மறுக்க, இதனால் ரோகினி- மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்தது. பின் ரோகினி- ஸ்ருதி- மீனா மூவரும் கிச்சனில் பேசிக்கொண்டிருந்தார்கள். மாடியில் ரவி-முத்து-மனோஜ் மூவரும் நடந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

கடைசியில் ஸ்ருதி, ரோகினி சொல்வதும் சரி, மீனா சொல்வதும் யோசிக்க வேண்டியது தான் என்று ஐடியா சொன்னார். இன்னொரு பக்கம் ரவி ஒரு ஐடியா சொன்னார். ஆனால், முத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில், ரோகினிக்கு பணம் கொடுப்பதை பற்றி மனோஜ் சொன்னவுடன் சந்தோசப்படுகிறார். ஆனால், வட்டிக்கு கொடுக்கலாம். அதுதான் லாபம் என்று சொன்னவுடன் ரோகினியும் வேறு வழியில்லாமல் சம்மதிக்கிறார். மறுநாள் கடையில் ரோகினி பணம் வாங்க வருகிறார். அப்போது ரோகினியின் தோழி தன்னுடைய அம்மாவின் ஆபரேஷனுக்கு பணம் வேண்டும் என்று ட்ராமா செய்கிறார்.

இன்றைய எபிசோட்:

அதையும் நம்பி மனோஜ் வட்டிக்கு விடுகிறார். பின் வெளியில் வந்த ரோகினி 1 லட்ச ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிடு, மீதி 75 ஆயிரத்தை கிரிஷ் படிப்பு செலவு கொடுத்து விடு என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் மீனா, செல்வத்தை சந்தித்து சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். அதை செல்வமும் ஏற்றுக்கொள்கிறார். அதற்கு பின் முத்து, பணத்தை ரெடி பண்ணி செல்வத்திடம் கொடுக்க, அவர் வாங்க மறுக்கிறார். உடனே முத்து, என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுகிறாய்? என்று கேட்டதற்கு செல்வம் எதுவுமே சொல்லவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement