ரோஜா சீரியல் நாயகன் சிப்புவிற்கு திடீரென திருமணம் முடிந்தது – வெளியான புகைப்படம் இதோ.

0
6972
roja
- Advertisement -

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான்.அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது. அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த 800 எபிசோடுகளை கடந்து பிரம்மாண்ட மைல் கல்லை எட்டியது. இது பற்றி சன் டிவி ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி கூறிட்வீட் ஒன்றை போட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த கதையின் நாயகன் சிபு, திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : ஆதித்ய வர்மா பட நடிகையா இப்படி ஒரு மோசமான நீச்சல் உடையில் – வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரோஜா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சிபு சூரியன். ரோஜா தான் தனது கடைசி சீரியல் என்று அதிர்ச்சயை கொடுத்து இருந்தார்.இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் ரோஜா, தொலைக்காட்சியில் எனது கடைசி சீரியலாக இருக்கும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக நான் இதில் நடித்து வருகின்றேன். இப்போது OTT மற்றும் படங்கள் போன்ற மற்ற தளங்களில் வெவ்வேறு வேடங்களில், கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன். நான் சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய போது, நான் ஒரு சராசரி நடிகராக இருந்தேன்.

This image has an empty alt attribute; its file name is 1-152.jpg

இப்போது, நிறைய மேம்பட்டுள்ளேன். தொலைக்காட்சி சீரியல்களில் பணிபுரியும் போது நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நிச்சயமாக, படங்கள் ஆபத்தானவை, சவால்கள் நிறைந்தவை என எனக்குத் தெரியும். ஆனால் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்”இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் சகுந்தலா என்ற கன்னட படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இதில் ஒரு ’கிரே’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். மேலும் புகழ்பெற்ற ஒரு குழுவினருடன் தமிழிலும் நடிக்கிறேன். இப்போது அது தொடர்பான எந்த விவரங்களையும் வெளியிட எனக்கு அனுமதி இல்லை. ஆனால் நான் படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறேன் என்பதை மட்டும் சொல்ல முடியும் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement