உங்க ஆக்டிங் பயணம் எப்படித் தொடங்கிச்சு?
என் பூர்வீகம், ஹைதராபாத். சின்ன வயசுலயிருந்தே டான்ஸ்தான் என் எவர் டைம் ஆக்டிவிட்டி. நிறைய புரோகிராம்களில் கலந்துப்பேன். எட்டாவது படிச்சுகிட்டிருந்தபோது, `அண்டாரி பந்துவாயா' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் பத்மபிரியாவுக்கு தங்கச்சியா நடிச்சேன். அந்தப் படத்தில் ஆக்டிங், டான்ஸ்னு கலக்கினேன். அடுத்தடுத்து நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு.
ரோஜா' சீரியல் மூலமாகத் தமிழில் என்ட்ரியான அனுபவம் பற்றி.
(சட்டென பதில் வருகிறது) "நோ நோ. ஆல்ரெடி தமிழ்ல நடிச்சிருக்கேன். 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் ஹன்சிகாவின் ஃப்ரெண்ட் ரோல். அப்புறம் தமிழ்ல பெரிய ரோல்ல நடிக்க ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனா, கிடைக்கலை. சில மாதத்துக்கு முன்னாடி, 'ரோஜா' சீரியல் ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். சீக்கிரமே என்னை செலக்ட் பண்ணிட்டாங்க. தமிழில் நடிக்கும் ஆசையும் நிறைவேறியிருக்கு. சீரியல் ஆரம்பிச்சு ரெண்டு மாசம்தான் ஆகுது.
அதுக்குள்ளே செம ரீச். சக ஆர்டிஸ்ட் எல்லோரும் குடும்ப உறவுகள் மாதிரி ஆகிட்டாங்க. ஷூட்டிங்ல ஃப்ரீ டைம் கிடைச்சா, மத்தவங்களுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுப்பேன். அப்போ அந்த இடமே கலகலப்பா இருக்கும். லாரன்ஸ் மாஸ்டரின் டான்ஸுக்கு நான் பெரிய ரசிகை. அவரின் 'காஞ்சனா' 3 படத்தில் நானும் நடிக்கிறேன்.




