கர்ப்பமான சன் டிவி சீரியல் நடிகை – கணவருக்கு கொடுத்த சர்ப்ரைஸ். வீடியோ இதோ.

0
12917
shamlie
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான்.அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜோ சீரியல், அந்த தொலைக்காட்சியின் வெற்றிகரமான சீரியலாக திகழ்ந்து வருகிறது. இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இந்த 800 எபிசோடுகளை கடந்து பிரம்மாண்ட மைல் கல்லை எட்டியது. இது பற்றி சன் டிவி ட்விட்டரில் ரசிகர்களுக்கு நன்றி கூறிட்வீட் ஒன்றை போட்டு இருந்தது.

இதையும் பாருங்க : அட, இந்த நடிகை இந்த பிரபல தமிழ் நடிகரின் முதல் மனைவியா ? யாருன்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஷமிலி தான் கர்ப்பமாக இருப்பதை அரமித்துள்ளார். நடிகை ஷமீலி, ரோஜா சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் ஏற்கனவே வாணி ராணி பாசமலர் பொன்னூஞ்சல் வள்ளி மாப்பிள்ளை போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஜீவா’ படத்தில் கூட நடித்து இருக்கிறார்.

இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது . இப்படி ஒரு நிலையில் இவர் கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து தனது யூடுயூப் பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை ஷமிலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement