முதன் முறையாக தன் குழந்தையை காட்டிய சன் டிவி சீரியல் நடிகை – Aunty என்று அழைத்தவருக்கு கொடுத்த பதில்.

0
1222
Shamilee
- Advertisement -

கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் சமீப காலமாக மக்கள் அனைவரும் சீரியல்களைப் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றிருக்கிறது. அதில் ஒன்று தான் ரோஜா சீரியல். இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் நாயகனாக சிபு நடிக்கிறார். நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்த சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தவர் ஷாமிலி. இவர் இடையில் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகினார். பின் இவருக்கு பதில் தற்போது வேறு ஒரு நடிகை அனு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஷாமிலி உடைய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஷாமிலி ஏற்கனவே வாணி ராணி, பாசமலர், பொன்னூஞ்சல், வள்ளி, மாப்பிள்ளை போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஷாமிலி நடித்த சீரியல்கள்:

மேலும், இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஜீவா’ படத்தில் கூட நடித்து இருக்கிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. இருந்தும் இவர் ரோஜா சீரியலில் நடித்து கொண்டு இருந்தார். பின் இவர் கர்ப்பமாக இருந்தார். இதுகுறித்து தனது யூடுயூப் பக்கத்தில் சொல்லி இருந்தார். சமீபத்தில் தான் ஷாமிலிக்கு பெண் குழந்தை பிறந்தது. மேலும், இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

ஷாமிலி போட்ட வீடியோ:

இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் யூடியூப்பில் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். பின் இவர் சீரியலில் இருந்து விலகியதும் அடிக்கடி வீடியோக்களை யூடியூப்பில் பகிர்ந்து வந்தார். அதோடு குழந்தை பிறந்த பிறகும் இவர் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் ஷாமிலி தன் கணவருடன் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

நான் என்ன ஆன்டியா:

அப்படி என்ன வீடியோ வெளியிட்டார் என்றால், ஷாமிலி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். எல்லோரும் சந்தோசமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுங்கள். அதோடு எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். அதேபோல் நான் ரோஜா சீரியலில் நடிப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இப்போ குழந்தையை கவனிப்பதினால் ரோஜா சீரியல் நடிக்க முடியாது.

வைரலாகும் ஷாமிலி வீடியோ:

ஆனால், வேறு ஒரு புது சீரியலில் புது கதாபாத்திரத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென்று நெட்டிசன் ஒருவர் ‘ஹலோ ஆன்ட்டி’ என்று பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ஷாமிலி, குழந்தை பிறந்த உடனே ஆண்டியா? இப்போ கொஞ்சம் உடம்பு குறைந்து தான் இருக்கிறேன் என்று கிண்டலாக பதில் அளித்திருக்கிறார். அதோடு இன்னொருவர், உங்களுடைய கணவர் ஹாண்ட்சம் என்று விமர்சித்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement