தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதனால் இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். மேலும், இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் ரஜினிகாந்த அவர்கள் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நடந்த வெள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர், நான் அரசியலுக்கு வராததற்க்கு மருத்துவர் ரவிச்சந்திரன் தான் காரணம்.

Advertisement

நான் அரசியல் ஈடுபடலாம் என்று முடிவெடுத்தபோது கொரோனா முதல் நிலை முடிந்து இரண்டாவது அலை வந்திருந்தது. நான் நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் அரசியலில் இருந்து பின்வாங்க முடியாது என்று மருத்துவரிடம் கூறினேன்.ஆனால், மருத்துவர் ரவிச்சந்திரன், நீங்கள் பிரச்சாரம் செய்வது, மக்களை சந்திப்பது இதெல்லாம் கூடாது. பிரச்சாரம் செய்யும் போது மக்களை மிக அருகில் சந்தித்தால் உங்களுடைய தொற்று பாதிக்கும். அதனால் பிரச்சாரம் செய்யும் போது பத்தடி தள்ளி நின்று பிரச்சாரம் செய்யலாம்.

ஆனால், மாஸ்கை கழட்டவே கூடாது என்று கூறினார். இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதால் தான் வேறு வழி இல்லாமல் நான் அரசியலில் ஈடுபட முடியாமல் பின்வாங்கினேன். ஆகவே, நான் அரசியல் வேண்டாம் என்று முடிவு எடுத்ததற்கு மருத்துவர் ரவிச்சந்திரனும் ஒரு காரணம் என்று கூறியிருந்தார். மேலும் பேசிய அவர் ‘கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்து எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

Advertisement

நமது உடலில் உள்ள இதயம் லப்டப் லப்டப் என்று பிறந்ததிலிருந்து சுமார் 70 வருடம் 80 வருடம் வரை அடித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞானியாவது இப்படி ஒரு மெக்கானிசத்தை செய்ய முடியுமா. அதேபோல் நமது உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள ஒரு துளியாவது விஞ்ஞானிகளால் செய்ய முடியுமா? என்று கேட்டார். இதையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறியதை பார்க்கும்போது எனக்கு அழுவதாக சிரிப்பதா என்று தெரியவில்லை என்று கூறினார்.

Advertisement

இவர் பேசிய இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சை கேலி செய்யும் வகையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எங்களுக்குகூடத்தான் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களை பார்த்தால் சிரிப்பு வருகிறது’ என்று பதிவிட்டுள்ளார். ஷர்மிளாவின் இந்த பதிவை ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்து இருக்கிறது.

Advertisement