செத்தும் காதலை தொடரும் சாக்க்ஷி மற்றும் கவின்.! அதுக்குன்னு இப்படியா.!

0
2571
Sakshi

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அபிராமி மற்றும் கவினுக்கு இடையே ரொமான்ஸ் ஓடியது. ஆனால், தற்போது கவின் மற்றும் சாக்க்ஷி மத்தியில் தான் கட்டுப்படுத்த முடியாத ரோமன்ஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்றைய கவின், லாஸ்லியாவிடம் பேசுவதை கண்டு பொறாமை கொண்ட சாக்க்ஷி, கவினிடம், லாஸ்லியாவிடம் நெருங்கி பழகுவது தனக்கு பிடிக்கவில்லை என்று நேரடியாகவோ கூறி இருந்தார்.

இத நிலையில் இன்றைய டாஸ்கில் கொலைகாரன் என்ற டாஸ்க் வனிதா மற்றும் முகனுக்கு கொடுக்கப்பட்டது, இதில் வனிதா மற்றும் முகேன் ஆகும் மற்ற அவர்களிடம் இருந்து தப்பிக்கும் நபர்களாகவும் இருந்து வந்தனர். இதில் வனிதா மற்றும் மற்றும் முகன் இருவரும் சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா கொலை செய்ய வேண்டும் என்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

- Advertisement -

அதில் முதலில் கொலை செய்யப்படும் நபரான சாக்க்ஷியை அவர் கையாலேயே, அவரது மேக்கப்பை கலைக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்டது பின்னர் அதனை வனிதா நிறைவேற்றினார். இதனால் சாக்ஷி இறந்து விட்டதாகவும் அவர் ஆவியாகி விடுவதால் அவரிடம் யாரும் பேசக்கூடாது என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இதன் பின்னர் மயான செட்டப்பில் அமர்ந்திருந்த சாக்ஷியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு என்னவோ சாக்ஷி நிஜமாகவே செத்துப் போனது போல முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டிருந்தார்கவின். பின்னர் அருகில் இருந்த சாக்ஷியோ இறந்து விட்டு பேசுவது போல, நான் எங்கேயும் போகமாட்டேன் இங்கேதான் இருக்கிறேன். எப்போதும் நீ செய்வதெல்லாம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்றெல்லாம் கூறினார். அதன் பின்னர் லாஸ்லியா கவனிடம் ,நீதானே இந்தக் கொலையைச் செய்தார் என்பதற்கு கவினோ உங்களை கொலை செய்துவிட்டு நான் வெல்வதற்கு பதிலாக என்னையே நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று வசனத்தை எல்லாம் விட்டார்.

-விளம்பரம்-

ஏற்கனவே சாக்க்ஷி மற்றும் கவினுக்கு இடையே ரொமான்ஸ் ஓடிக் கொண்டிருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், இன்று இவர்கள் இருவரும் செய்த ரொமான்ஸை பார்த்து பார்வையாளர்கள் அனைவருமே கொஞ்சம் கடுப்பில் தான் இருந்தனர்.

Advertisement