திரௌபதி படத்தை தொடர்ந்து மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படம் தனுஷின் கர்ணன் படத்தை விட சிறப்பாக இருக்கும் என்று பிரபல நடிகர் கூறியிருப்பது தற்போது சமூக வலைதளத்தில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன், நடிகை ஷாலினியின் தம்பி ரிச்சர்ட்டை வைத்து ‘திரௌபதி’ படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படம் வெளியான போதே இந்த படத்தின் ஜாதி சாயம் அதிகம் இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினரை கூறி வைத்து எடுக்கப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்டை வைத்து ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன்.

இதையும் பாருங்க : ‘அந்த கதைய என்னால புரிஞ்சிக்க முடியல’ – தனுஷ் படத்தை தவறவிட்டதை எண்ணி 2 நாள் தூங்காமல் இருந்துள்ள பரத்.

Advertisement

இந்த படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக குக்கு வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா நடித்துள்ளார். மேலும், இயக்குனர் கெளதம் மேனன், ராதாரவி போன்ற மிகப்பெரிய பிரபலங்களும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ராதாரவி, இந்த படத்தோட டிரைலரை பார்த்து விட்டு அவரை அட்டாக் செய்வது போல இருக்கு இவரை அட்டாக் செய்வது போல இருக்குனு சொல்றாங்க யாரையும் அட்டாக் செய்யல ஒரு நியாயமான கோரிக்கையை அருமையாக இயக்குனர் சொல்லியிருக்கார்.

இந்த படத்தை பார்த்துட்டு மத்தவங்க திருந்தனும். இந்த படம் எல்லாருக்கும் ஒரு பொதுவான படம். இந்த படம் கர்ணன் படம் பெற்ற புகழை விட இரண்டு மடங்கு புகழை பெறும். அதுலயாவது குறிப்பிட்ட ஒரு ஜாதிய பத்தி பேசுனாங்க. ஆனால், இந்த படம் அப்படி இல்ல. நான் வணங்கும் தலைவர்களில் ஐயா அம்பேத்காரும் ஒருவர்.

Advertisement

இந்தியாவுக்காக அரசியல் சாசன சட்டத்தை எழுதிக்கொடுத்தார். குறிப்பிட்ட ஒரு சாதிக்காக அவர் அரசியல் சாசன சட்டத்தை எழுதலை. இதைத்தான் இந்த படம் பேசுகிறது. இந்த படத்தில் ராதாரவி நடித்துவிட்டார்னு சொல்றாங்க நான் என்ன பூச்சாண்டியா? ஏன் நான் இந்த படத்தில் நடிக்க கூடாதா நடித்தால் தலையை வெட்டிடுவான்ங்களா ? படத்தை பார்த்தோமா ரசிச்சோமான்னு இருங்க என்று கூறியுள்ளார். இந்த படம் கர்ணன் படத்தை மிஞ்சிமா மிஞ்சாதா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement
Advertisement