‘அந்த கதைய என்னால புரிஞ்சிக்க முடியல’ – தனுஷ் படத்தை தவறவிட்டதை எண்ணி 2 நாள் தூங்காமல் இருந்துள்ள பரத்.

0
20610
dhanush
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக பரத் திகழ்ந்து வருகிறார். இவர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து காதல், வெயில், பட்டியல், எம்டன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா உலகிற்கு கொடுத்துள்ளார். மேலும், இவரது சில படங்கள் தோல்வியில் முடிந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் புது புது கதைகளத்துடன் படங்களை கொடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த காளிதாஸ் படம் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது நடிகர் பரத் அவர்கள் சரண் குமார் இயக்கத்தில் நடுவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், பாலா உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படம் தற்போது வெளியாவதற்கு தயாராக இருக்கிறது.

இதையும் பாருங்க : பிக் பாஸ்க்கு நான் போல, அதுக்கு காரணம் இதான் – நிகழ்ச்சியில் பேசிய ஜி பி (வீடியோ இதோ)

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பரத் அவர்கள் நடுவன் படம் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் நீங்கள் தவறவிட்ட படம் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு பரத் கூறியது, என்னை அறியாமல் நான் இரண்டு படங்களை தவற விட்டேன். அது திருவிளையாடல் ஆரம்பம், கோ. திருவிளையாடல் ஆரம்பம் படத்தை பற்றி இயக்குனர் என்னிடம் சொல்லும்போது என்னால் அந்த கதையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. படம் எப்படி வரும் என்று ஏதோ ஒரு காரணத்தினால் அந்த படத்தை தவற விட்டேன். ஆனால், என்னோட தனுஷ் அந்த படத்தில் நன்றாக பண்ணி இருந்தார். அந்த படம் வெளிவந்து நல்ல ஹிட் கொடுத்தது.

வீடியோவில் 8 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

பின் நான் இயக்குனர் இடம் படம் நல்லா வந்திருக்கு என்று பேசினேன். அதேபோல் தனுஷும் காதல் படத்தில் நடிக்க வேண்டியது. கோ படமும் நான் பண்ண வேண்டியது. எனக்கே தெரியாமல் என் கையை விட்டுப்போன படம். என்னை முதன்முதலில் கேமராவில் காண்பித்த கே வி ஆனந்த் சார் இயக்கிய கோ படம் எனக்கு கிடைக்கவில்லை என்று நான் இரண்டு, மூன்று நாட்கள் தூங்க கூட இல்லை. இந்த படம் ஹிட் சூப்பர் ஹிட் கொடுத்தது. நமக்கு எழுத பட்டதை யாராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement