சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரை வைத்து கிண்டல் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்.! ஏன் தெரியுமா.!

0
626

தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். விஜய் சேதுபதி அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இதனால் அவரது படங்கள் தயாரிப்பாளர்கள் கையை சுடாமல் லாபம் பார்த்து கொடுக்கின்றன.

சமீபத்தில் திரைக்கு வந்த செக்கச் சிவந்த வானம், 96 ஆகிய படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாக நடிக்கிறார்.

- Advertisement -

மேலும், சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிர்னாலினி போன்ற பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல் அர்னால்டு இந்த படத்தை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் வரும் வசனத்தை பதிவிட்டு @Srinimama வை டேக் செய்துள்ளார். இதற்கு முக்கிய காரணமே தற்போது இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா எடையெயான தொடரை ட்விட்டரில் ஸ்ரீனிமாமா என்பவர் விமர்சித்து தான்.

-விளம்பரம்-

Advertisement