இளையராஜாவின் ஸ்டுடியோவில் ரஷ்யா நடன கலைஞர்கள் நடனமாடிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு வருகிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல இருக்கிறது. மேலும், இவர் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
இளையராஜா திரைப்பயணம் :
இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இவர் தன்னுடைய இசையால் உலகத்தையே கட்டி போட்டு வைத்திருக்கிறார் என்று தான் சொல்லணும். இதுவரை இவர் 7000க்கும் அதிகமான பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் 20000க்கும் அதிகமான இசை கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.

இளையராஜா குறித்த தகவல்:
ஆரம்பத்தில் இளையராஜா அவர்கள் நாட்டுப்புற இசையை தான் நடத்தி இருந்தார். அதற்குப்பின் பாவலர் பிரதர்ஸ் என்ற இசைக்கு குழுவில் இணைந்து 10 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் இசை கச்சேரிகளை நிகழ்த்தி இருந்தார். இன்று உலகம் மக்களே கொண்டாடும் இசையமைப்பாளராக இளையராஜா திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது.

இளையராஜாவின் ஸ்டுடியோ:
இதில் பாடகர்கள் பலர் பாடல்களை பாடி இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் எவர் கீரின் பாடல்களும் பாடப்பட்டது. இந்த நிலையில் இளையராஜாவின் ஸ்டுடியோவில் ரஷ்யாவை சேர்ந்த நடன கலைஞர்கள் வந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு ரஷ்யாவை சேர்ந்த நடன கலைஞர்கள் வந்திருக்கிறார்கள்.
My sincere many thanks to all these wonderful dancers from Russia to have come all the way to my studio for a very special performance which was full of grace, mesmerising, very expressive, heart-touching, alluring and flawless… 💃 💃 💃 🙏🙏🙏 pic.twitter.com/W8Bt42hpOE
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 2, 2025
ரஷ்யா நடன கலைஞர்கள்:
இவர்கள் அங்கு இளையராஜாவின் பாடலுக்கு நடனமாடியும் இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோவை தான் இளையராஜா சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். ரஷ்யாவை சேர்ந்த நடன கலைஞர்கள் தங்களுடைய நாட்டு ஸ்டைலில் ஓ பட்டர்பிளை பட்டர்பிளை என்ற பாடலுக்கும், பூவே செம்பூவே என்ற பாடலுக்கும் டான்ஸ் ஆடி அசத்திருக்கிறார்கள். இதற்கு இளையராஜா நன்றியும் சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு பாடல்களுக்கும் இளையராஜா தான் இசை அமைத்து இருந்தார்.






