பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தன்னை காயப்படுத்தியதற்கு முக்கிய காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹெலோ டாஸ்கின் போது ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், மதுமிதாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆண்கள் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.
இதையும் பாருங்க : 18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.! வனிதாவிடம் வாயை கொடுத்து மாட்டிய கஸ்தூரி.!
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா வெளியேறியதற்கு போலீஸ் விசரனை நடத்த வேண்டும் என்று நடிகர் எஸ் வி சேகர் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ளார் அவர், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா. ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை என்று பதிவிட்டிருந்தார்.
எஸ் வி சேகரின் இந்த பதிவிற்கு பின்னர், பல்வேறு ட்விட்டர் வாசிகள் அனைவரும் அவரை வறுத்தெடுத்துள்ளனர். அதில் ஒரு சிலர், உங்களை கைது செய்ய பிடிவாரன்ட் போடப்படும் என தெரிந்து, வீடு வீடாக அடைக்கலம் தேடி ஓடுனீர்களே, அதை விசாரிக்க சொல்வோமா? பிக்பாஸ் நிகழ்சியை முழுவதுமாக பார்க்காம கண்டதை, கேட்தையெல்லாம் வைத்து உளறுவதை நிற்த்துங்க.
இதற்கு முக்கிய காரணமே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருடைய கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பத்திரிகையாளர்கள் பலரும் எஸ்.வி.சேகரின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்தனர். மேலும், எஸ் வி சேகருக்கு பிடி வாரண்டும் வழங்கப்பட்டது. ஆனால், அவர் இதுவரை கைது செய்யப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.