மீண்டும் என்ட்ரி கொடுக்க போகிறாரா சாச்சனா? பிக் பாஸ் போட்டுள்ள பலே திட்டம் இது தானா?

0
235
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ஒரு அதிரடி அப்டேட் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இன்று மூன்றாவது நாள். இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் எல்லோருமே குழப்பத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள். கடைசியில் ஆண்கள், பெண்கள் கேட்ட பக்கம் விட்டுக் கொடுத்தார்கள். இருந்தாலும், ஒரு வாரம் எந்த ஆண்களையும் எலிமினேஷன் செய்யக்கூடாது என்ற கண்டிசன் போட்டார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

இதை பெண்கள் அணி ஏற்று கொண்டாலும் ஜாக்லினுக்கு இதில் உடன்பாடு இல்லை. இப்படி முதல் நாளே பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்கும், சலசலப்பும் தொடங்கிவிட்டது. பின் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்று பிக் பாஸ் அறிவித்தது எல்லோருக்குமே ஷாக்கிங் ஆன விஷயம் தான். அதன் பின் ஒவ்வொரு போட்டியாளர்களுமே ஒவ்வொருவரின் பெயரை நாமினேட் செய்திருந்தார்கள். அந்த வகையில் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அதன் அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. இதில் தர்ஷிகா வெற்றி பெற்று இந்த வார தலைவராகி இருக்கிறார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின்,ரவீந்தர்,சௌந்தர்யா, முத்து, ரஞ்சித்,அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். நேற்று ஆண்கள் vs பெண்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும், பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் போக வேண்டும். இதில் ஜாக்லின்- சுனிதா இடையே சண்டை நடந்தது.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

அதன் பின் ஆண்கள் அணிக்கு பவித்ராவை போக கூடாது என்று ஜாக்லின் சொல்ல, இருவருக்கும் சண்டை வந்தது. ஒரு வழியாக பஞ்சாயத்து செய்து பவித்ரா ஆண்கள் அணிக்கும், முத்து பெண்கள் அணிக்கும் சென்று இருந்தார்கள். இதற்கிடையில் ரவிந்தருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. உடனே அவருக்கு முதலுதவியும் கொடுக்கப்பட்டது. இருந்தும் அவரால் பிக் பாஸ் வீட்டில் சமாளிக்க முடியுமா? என்பது தெரியவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் திடீரென ஒரு அதிரடி அப்டேட் தான் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் 8 அப்டேட்:

அதாவது, முதல் நாளே எந்த ஒரு வாய்ப்பையும் தராமல் சாச்சனாவை வெளியேற்றி இருந்தது பலருக்குமே ஷாக்கிங் தான். இதை பற்றி பலருமே விவாதம் செய்திருந்தார்கள். இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வளர்ந்து வரும் பெண்ணுக்கு இப்படி ஒரு முடிவை பிக் பாஸ் கொடுத்து இருக்க கூடாது, ஒரு வேளை இது டிஆர்பி ரேட்டிங்காக இருக்குமா? என்றெல்லாம் கூறி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சாச்சனா மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி வந்தால் இதைப் பற்றி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement