பிரபல ஷாப்பிங் விளம்பரத்தில் மாடலாக நடித்துள்ள சச்சின் மகள் – எப்படி வளந்துட்டார் பாருங்க. வைரல் வீடியோ.

0
711
Sachin
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் மற்றும் 100 சதங்கள் என இவர் எண்ணிலடங்கா பல சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார். சச்சின் 1995ஆம் ஆண்டு அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு சாரா என்ற மகளும் அர்ஜுன் என்ற மகனும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Sachin Tendulkar's daughter Sara makes modelling debut alongside Banita  Sandhu, Tania Shroff. Watch - Movies News

மகன் அர்ஜுன் தற்போது மும்பை அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இடது கை மீடியம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் பேட்டிங்கும் செய்யக்கூடியவர். அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக நெட் பவுலராக இருந்துள்ளார்.மேலும் அவருடைய மகள் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார்.

- Advertisement -

தற்போது 24 வயதாகும் சாராவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 1.6 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஒரு பிரபல துணி பிராண்டின் விளம்பரத்தில் சாரா நடித்து இருக்கிறார். அதன் வீடியோவை அவரே இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கிறார். அந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து இருக்கிறது. மேலும் கமெண்டில் நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

அவரை சூப்பர்மாடல் என சிலர் கமெண்ட் செய்து இருக்கின்றனர். கிரிக்கெட் உலகில் இருந்த பல்வேரு வீரர்கள் பின் நாளில் நடிகர்களாக மாறி இருக்கின்றனர். ஆனால், சச்சின் பல விளம்பரங்களில் நடித்தாலும் படங்களில் நடித்து இல்லை. ஒரு வேளை இவரது மகள் நடிக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

-விளம்பரம்-
Advertisement