விலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர்.! இவரா இந்த மாறி படத்தில்.? யார் தெரியுமா.?

0
427
Bigg-Boss-Rithvika-movie

தமிழ் சினிமாவில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படங்கள் அதிகமாகி கொண்டே வருகிறது. பெரிய ஹீரோக்கள் இல்லை என்றால் கூட படமும், கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி தான், அந்த வகையில் நடிகை சதாவும் ஒரு விலை மாதுவாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார்.

Rithvika

தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித், மாதவன் என்று முன்னனி நடிகர்களுடன் நடித்துவந்தார். பல புது முக நாயகிகளின் வருகையால் பட வாய்ப்பை இழந்த சதா கடைசியாக வடிவேலு நடித்த ‘எலி ‘ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகை சதா, தற்போது இயக்குனர் மஜித் இயக்கும் ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை ரித்விகா, தினேஷ்குமார், சுஜாதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Rythivika

rithvika-big-boss

Bigg-Boss-Rithvika

Bigg-boss

நெடுஞ்சாலையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தங்களது பாலியல் தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கும் தரகர்களால் ஏற்படும் கொடுமைகளை குறித்து விவரிக்கும் ஒரு படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்திற்கான டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது.