புஷ்பா 2வில் சாய்பல்லவி ?சமந்தாவுக்கு பதிலாக வசூலில் அள்ளுவாரா ? என்ன ரோல் தெரியுமா ?

0
342
Pushpa
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விவகாரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா தடையில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தனர்.

- Advertisement -

சமந்தாவின் முதல் ஐட்டம் பாடல் :

மேலும், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

புஷ்பா 2 :

இதனை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதோடு சமந்தாவிற்கு பதிலாக பாலிவுட் நடிகை க்ரிட்டி சோனன் ஆட இருக்கிறார். ஏற்கனவே இவர் ஆடிய ‘பரம சுந்தரி’ பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒவொவொரு நாளும் தொடர்ந்து புஷ்பா 2 படத்தை பற்றி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் நிலையில் மற்றொரு பிரபல நடிகை புஷ்பா 2 படத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

புஷ்பா 2ல் சாய்பல்லவி :

அதாவது புஷ்பா 2 படத்தில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகை சாய்பல்லவி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சாய்பல்லவி இந்த படத்தில் மலைவாழ் மக்களை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலை நடிகை சாய் பல்லவி அதிகாரப்பூர்வமாக உறுதிப்டுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.

1000 கோடி வசூல் செய்ய ஏற்பாடு :

இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா கூட்டணி ஏற்கனவே புஷ்பா படத்தில் 900 கோடி வரையில் வசூல் செய்திருந்தது. இதனால் புஷ்பா 2 படத்தில் இதனை விட 100 கோடி அதிகமாக 1000 கோடி வசூல் செய்ய படக்குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும் இதன் காரணமாக பல நடிகர்கள் இப்படத்தில் களமிறக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நடிகை சாய்பல்லவி புஷ்பா 2ல் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement