விஜய் தேவர்கொண்டாவின் படத்தை நிராகரித்த சாய் பல்லவி.! காரணத்தை கேட்டால் ஷாக் ஆவீங்க.!

0
7273
sai-Pallavi

தென்னிந்திய நடிகையான சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர் என்பதும் அனைவருக்கும் தெரியும். மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அதன் பின்னர் தெலுங்கில் சிறந்த நடிகை என்று பெயரெடுத்துள்ளார். தெலுங்கில் இவர் நடித்த பிடா படத்திற்காக பல்வேறு விருதுகளையும் குவித்துளளார்.

Image result for vijay devarakonda

ஆனால், சமீபத்தில் இவர் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஆம், அது வேறு யாருமில்லை தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமடைந்த விஜய் தேவர் கொண்டா தான். விஜய் தேவர்கொண்டா தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி.! நீச்சல் உடைகளில் கொடுத்த போஸ்.!

- Advertisement -

சமீபத்தில் இவர் டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிக நடித்துள்ளார். ஆனால், இந்த படத்தில் ராஷ்மிகா கதாபாத்திரத்தில் முதன்முறையாக சாய் பல்லவி தான் நடிப்பதாக இருந்தது .சாய் பல்லவி தெலுங்கில் இறுதியாக நடித்த திரைப்படங்கள் மிகப்பெரிய தோல்வி அடைந்தது, இருப்பினும் அம்மணிக்கு 3 பட வாய்ப்புகள் கைவசம் உள்ளது.

Image result for dear comrade kissing scene

அந்த வகையில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள டியர் காம்ரேட் படத்தில் நடிக்க சாய் பல்லவியை தான் முதலில் அணுகியுள்ளனர். ஆனால், இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டவுடன் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்பதால் இந்த படத்தில் வாய்ப்பை நிராகரித்துள்ளார் சாய்பல்லவி. இந்த படத்தின் கதையை இயக்குனர் சாய் பல்லவியிடம் கூறியபோது முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்ற கூறிய அடுத்த நொடியே சாய் பல்லவி அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

-விளம்பரம்-
Image result for sai pallavi

ஆனால் முத்தக் காட்சியில் நடிப்பது குறித்து விஜய் தேவர்கொண்டா கூறுகையில் முதலில் இதனை லிப்லாக் காட்சி என்று கூறுவதை நிறுத்துங்கள். அது ஒன்றும் தவறான விஷயம் கிடையாது. கோபம் வந்தால் நாம் என்ன செய்வோம் ? அழுகை வந்தால் நாம் என்ன செய்வோம் .அதே போலத்தான் இதுவும் ஒரு உணர்வு. உண்மையில் எனக்கு லிப் லாக் காட்சி என்று வார்த்தையை கேட்டாலே கோபம்தான் வருகிறது. மற்ற உணவுகளைப் போலவே முத்தமும் என்பதும் ஒரு விதமான உணர்ச்சியின் வெளிப்பாடுதான் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement