சினிமா திரையுலகம் வரலாற்று கதைகளை இயக்குவதிலேயே குறிக்கோளாக உள்ளனர். அந்த வகையில் பாகுபலி படத்திற்கு அடுத்து பிரம்மாண்டமான அளவிலும், அதிக பட்ச செலவிலும் “சைரா நரசிம்ம ரெட்டி ” படம் வந்துள்ளது.அதிகமாக தெலுங்கு சினிமா துறை தான் இந்த மாதிரி வரலாறு கதைகளை எடுத்து வருவது வழக்கம். அதற்குப்பின் டப்பிங் செய்து மற்ற மொழிகளில் வெளியிடுவார்கள்.அந்த வகையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் நடிப்பில் வெளிவர உள்ளது “சைரா நரசிம்ம ரெட்டி “. இது ஒரு தெலுங்கு படம் ஆகும். மேலும், இந்தப்படம் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய காரணமான நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கையை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் திரையரங்கிற்கு வரப்போகிறது என்றும் அறிவித்தார்கள்.இந்த படத்தில் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி,சுதீப்,நயன்தாரா,தமன்னா,விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள்.

கதைக்களம் :

Advertisement

உய்யலவாடா பாளையராகார நரசிம்ம ரெட்டி– சிரஞ்சீவி
கோசாயி வெங்கண்ணா (குருவாக)– அமிதாப்பச்சன்
ஜான்சி ராணி–அனுஷ்கா
நரசிம்ம ரெட்டியின் மனைவி — நயன்தாரா
நரசிம்ம ரெட்டியின் காதலி(லக்ஷ்மி) — தமன்னா
நரசிம்ம ரெட்டி நண்பன் — சுதீப்
தமிழ் நாட்டு வீரர் — விஜய் சேதுபதி

இந்தப்படம் இந்திய சுதந்திர போராட்டத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை எடுத்து சொல்வதாகும். நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலம் அது. அந்த காலத்தில் இருந்துதான் கதை துவங்குகிறது. இந்த படத்தில் ஜான்சி ராணியாக அனுஷ்கா உள்ளார். மேலும், அவர் நரசிம்ம ரெட்டியின் கதையை தன்னுடைய படைகளுக்கு செல்கிறார்.இதில் சிரஞ்சீவி ‘உய்யலவாடா பாளையராகார நரசிம்ம ரெட்டி’ கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், சிறுவயதிலிருந்தே ஆங்கிலேயர்கள் இந்தியர்களை தூக்கிலிட்டு கொடுமைப்படுத்தியும் , சித்திரவதை படுத்தி வருவதை பார்த்து, பார்த்து கோபத்தில் கொந்தளித்து வளர்ப்பவர் தான் சிரஞ்சீவி.பின் சிரஞ்சீவி அவருடைய குரு கோசாயி வெங்கண்ணாவிடம் நான் இப்போவே போய் 10-ஆங்கிலேயரை யாவது கொன்று விடுகிறேன் என்று கூறினார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டிற்குள் புதிதாக நுழைந்துள்ள 8 நபர்கள்.! யார் இவங்க ?

Advertisement

அதற்கு குரு சொல்கிறார், நீ மற்றவர்களை கொள்வதோ! இல்லை நீ வீழ்வதோ முக்கியமில்லை. நம் இந்திய நாட்டை விட்டு ஆங்கிலேயர்களை எப்படியாவது விரட்டுவது தான் அவசியமானதும் முக்கியமானதும் என்று கூறினார். உன்னிடம் இருக்கும் இந்த வேகம், கோபம் எல்லாம் உன்னை சுற்றி இருப்பவர்கள் இடமும் வர வைக்க வேண்டும் என்று கூறினார். அப்போதில் இருந்து தான் சிரஞ்சீவி அவர்களின் கதை ஆரம்பித்தது.மேலும், நரசிம்ம ரெட்டி எப்படி? தன் மக்களின் சுதந்திரத்துக்காக போராடுகிறார் என்றும், மக்களின் மனதில் எப்படி சுதந்திர எண்ணத்தை விதைத்து வழிநடத்தி செல்கிறார் என்றும், சுதந்திரப் போராட்டத்திற்காக ஒரு பெரிய இயக்கத்தை எப்படி நாடு முழுவதும் துவங்கி வைக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

Advertisement

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படத்தை தாங்கி நிற்பது சிரஞ்சீவி தான். மேலும், நரசிம்ம ரெட்டி கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி அவர்கள் கம்பீர தோற்றத்துடனும், வீரமான இந்தியனுக்கு உரிய தோற்றத்துடனும் கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். நரசிம்ம ரெட்டியின் மனைவியாக நயன்தாரா நடத்தியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா அவர்கள் ஒரு சில காட்சிகளில் மட்டும் தான் தோன்றியுள்ளார். மேலும், நரசிம்ம ரெட்டி காதலியாக தமன்னா நடித்துள்ளார். இவரும் ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் தோன்றியுள்ளார்.இருவரும் படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து இருந்தாலும் மக்களின் மனதில் அதிக இடம் பிடித்துள்ளார்கள். தமன்னா லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமன்னா நரசிம்ம ரெட்டியை காதலித்து பின் அவர் வேறொரு திருமணம் செய்து கொண்டார் என்று தெரிந்தவுடன் தற்கொலை செய்யத் துணிகிறார். பின்னர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு நரசிம்ம ரெட்டி அவர்கள் நாடு முழுவதும் சுதந்திர போராட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ப்பதை அறிந்து இறுதியில் போராட்டத்தில் தன் உயிரையும் தியாகம் செய்யவும் துணிந்து போராடி இருக்கிறார் தமன்னா. சொல்லும் போது உடம்பு சிலிர்க்கும் அளவிற்கு தமன்னாவின் கதாபாத்திரம் இருந்தது. சுதீப் ஆரம்பத்தில் நரசிம்ம ரெட்டி உடன் பல பிரச்சனைகள் இருந்தாலும், சுதந்திர போராட்டம் என்று சொன்னவுடன் அவருடன் இணைந்து போராடா தொடங்கினார். இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் கொடுப்பது சுதீப் உடைய கதாபாத்திரத்திற்கு தான். மேலும், விஜய் சேதுபதியை காணோம்னு பாத்தா தமிழரின் பெருமை சேர்க்கும் வகையில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்கும் தமிழக வீரனாக நடித்துள்ளார்.படத்தில் ஒரு சில நொடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தன்னுடைய தமிழின் பெருமையை அழகாக காண்பித்துள்ளார் விஜய் சேதுபதி.

பிளஸ்:

இந்தப் படத்தில் அரவிந்த் சுவாமியின் டப்பிங் குரல் மெய்சிலிர்க்க வைத்தது.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருந்தது.

சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் நாம் இந்தியன் என்ற உணர்வை தூண்டும் அளவிற்கு இருந்தது.

உண்மையிலேயே இது ஒரு நிஜ தலைவனின் கதை என்பதால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

படம் முழுவதும் இந்திய தேசப் பற்றை ஏற்படுத்தியது. .

மைனஸ்:

சைரா நரசிம்ம ரெட்டி படம் கொஞ்சம் நிதானமாக போனது போல் இருந்தது.

கதையின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்.

பிரம்மாண்டம் என்று எதிர் பார்த்த சென்ற ரசிகர்களுக்கு பாகுபலி போல் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட அலசல் :

மொத்தத்தில் “சைரா நரசிம்ம ரெட்டி ” படம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தேசப்பற்றை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மேலும் பிரம்மாண்டமாக அளவிலும் , பாதி பேருக்கு மேல் அறிந்திராத தகவல் தெரியப்படுத்தும் வகையில் இருந்தது.நாம் இப்போது சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை நம்முடைய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல தலைவர்களை நினைவு கொள்ளும் வகையில் படம் இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement