மேடையில் பீஸ்ட் நாயகியிடம் தன் பிரபல ஸ்டெப்பை போடா Try பண்ணி பல்ப் வாங்கிய சல்மான் கான். வீடியோ இதோ.

0
446
salman
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் சல்மான் கான். இவர் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பீவி ஹோ தோ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக களமிறங்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து கலக்கியிருக்கிறார். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கான் இந்தி திரையுலகில் ஹீரோவாக வலம் வந்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இருந்தாலும் 2002 ஆம் ஆண்டு மும்பையில் சாலை ஓரத்தில் படுத்திருந்தவர்கள் மீது சல்மான்கான் வாகனம் மோதிய வழக்கு குறித்து பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. அதிலிருந்து மீண்டு இவர் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் பல ஆண்டு காலமாக சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இவருடைய நடிப்பில் வெளி வந்திருந்த தபாங் படம் மிகப் பெரிய பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

- Advertisement -

சல்மான் கான் நடித்த படங்கள்:

அதை தொடர்ந்து இந்த படத்தின் மூன்று பாகங்கள் தொடர்ந்து வெளியாகி இருந்தது. இப்படி இவர் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்து இருந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இவர் தன்னுடைய ஓய்வு நாட்களை சுவாரசியமாக கழித்து வருவார். சமீபத்தில் இவர் பண்ணை வீட்டில் இருந்த சல்மான் கானை பாம்பு கடித்தது. இதனையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விஷ முறிவு மருந்தை கொடுத்து சல்மான் கான் காப்பாற்றப்பட்டார்.

சல்மான்கான் – பூஜா நடனமாடிய வீடியோ:

இந்நிலையில் சல்மான் கான் நடனமாடிய வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற DubaiExpo2020 என்ற விழாவில் சல்மான்கான் கலந்து கொண்டிருந்தார். அப்போது சல்மான்கானும் பீஸ்ட் பட நாயகி பூஜா இருவரும் சேர்ந்து மேடையில் நடனம் ஆடினார்கள். அப்போது சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கிக் படத்தின் Jumme Ki Raat என்ற பாடலும் வந்திருந்தது. அந்த பாடலுக்கு சல்மான்கான் நடனமாடினார்.

-விளம்பரம்-

சல்மான் கான் நடித்த கிக் படம்:

அதாவது தெலுங்கில் ரவி தேஜா நடித்த கிக் என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் தில்லாலங்கடி ஆக வெளிவந்தது. ஆனால், இந்தியில் 2014 ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் கிக். இந்த படத்தில் சல்மான்கானுடன் ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை செய்திருந்தது. மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற Jumme Ki Raat என்ற பாடலும் மிக பிரபலமானது. இந்த பாடலுக்கு சல்மான்கான் போட்ட ஒரு ஸ்டெப் படு வைரலானது. இந்நிலையில் அதைத்தான் சல்மான்கான் அவர்கள் துபாயில் நடைபெற்ற விழாவில் பூஜா ஹெக்டே உடன் ஆட முயற்சி செய்தார்.

சல்மான்கானை கலாய்க்கும் நெட்டிசன்கள்:

ஆனால், அதை பூஜா கண்டு கொள்ளாமல் நகர்ந்து சென்று விட்டார். சல்மான்கானும் எப்படியாவது அந்த ஸ்டெப்பை போட முயற்சி செய்கிறார். கடைசியில் பாடல் முடிந்து விடுகிறது. ஆனால், சல்மான்கானால் அந்த ஸ்டெப் போட முடியவில்லை. இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் எதுக்கு உனக்கு இந்த தேவை இல்லாத வேலை என்று விமர்சித்தும் கிண்டல் கேலி செய்து மீம்ஸ்களை வெளியிட்டும் வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement