பிக் பாஸ் வீட்டில் நுழைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் – யார் தெரியுமா ? லேடிஸ் Fansக்கு எல்லாம் குஷிதான் போங்க.

0
349
samvishal
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் பிரபலம் கலந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அந்த வகையில் நடன இயக்குனர் ராபர்ட், நடிகை ரக்ஷிதா, விசித்ரா, அர்ச்சனா, ஜிபி முத்து, சிவகுமார், விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், அமுதவாணன் என பல பேர் அடிபட்டு வருகிறது. இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

மேலும், இந்த முறையும் நிகழ்ச்சியில் திருநங்கை சிவின் கணேசன் கலந்து கொள்ள இருக்கிறார். இவர்களை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஷெரினா, ஜனனி,மது போன்ற பல பேர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் சூப்பர் சிங்கர் பிரபலம் கலந்து கொண்டிருக்கும் தகவல் வெளியாகிறது. அவர் வேறு யாருமில்லைங்க, சாம் விஷால். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் விஷால்.

பிக் பாஸ் வீட்டில் சாம் விஷால்:

இவருடைய மெலோடி இசைக்கு என்றே தொடர் தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் வெள்ளி திரையிலும் படங்களில் பாடிக்கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஆல்பம் பாடல்களையும் இயக்கி வருகிறார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் சாம் விஷால் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

Advertisement