தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பு மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது.
First pic : on the day of they both are announced their divorce
— Innocent King (@Innocent_King1) March 28, 2023
Second pic : now clearly shows, that girl is shobita.
Cheapest person @chay_akkineni
Cheating a girl who’s love you unconditionally. Even she put your signature tatto in body.#NagaChaitanya #SamanthaRuthPrabhu pic.twitter.com/2ZhQ45sje5
இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இதனை அடுத்து இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நாக சைதன்யாவின் இரண்டாவது திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் பல தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்னொரு பக்கம், நடிகர் நாகை சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவுடன் காதலில் சிக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நாக சைதன்யா சோபிதாவுடன் டேட்டிங் செய்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் இவர்கள் இருவரும் ஜுப்ளியில் உள்ள நாக சைதன்யா புதிய வீட்டில் ஒன்றாக இருந்ததாகவும், அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருந்ததாகவும் டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு இருந்தது. இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு இடத்தில் இருவரும் நின்றிருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி இருந்தது.
இதனால் சமந்தாவீண் ரசிகர்கள் பலர் சமந்தாவை நாக சைதன்யா தான் ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் வகையில் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், சாகுந்தலம், யசோதா, குஷி போன்று பல படங்களில் மிரட்டிக் கொண்டு வருகிறார்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சமந்தாவிடம் , விவாகரத்துக்கு பின் நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் செய்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
மேலும் அந்த கேள்விக்கு சமந்தா ‘எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும்.குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது’ என்று கூறியதாகவும் ஒரு செய்தி வைரலானது. ஆனால், இந்த செய்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நான் இப்படி சொல்லவே இல்லை’ என்று சமந்தா கூறி இருக்கிறார்.