சமந்தாவின் 10th மற்றும் 12th மார்க் ஷீட்டை பார்த்துளீர்களா ? ஆசிரியர் அப்போதே அவரை பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்க.

0
796
samantha
- Advertisement -

நடிகை சமந்தாவின் 10th,11th மார்க் ஷீட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தார்கள். இதனால் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காத்துவாக்குல 2 காதல்.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், யசோதா, குஷி, ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

சமந்தா குறித்த தகவல்:

சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சமந்தா அவர்கள் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பற்றி பல விஷயங்களை கூறியிருந்தார். அதோடு தங்கள் இருவரும் திருமணத்திற்கு பின் சேர்ந்து வாழ்ந்த வீட்டை சமந்தா பெரிய தொகை கொடுத்து சமீபத்தில் வாங்கி இருக்கிறார். தற்போது சமந்தா ஹிந்தியில் மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில் நடிகை சமந்தாவின் பள்ளிப்பருவ மார்க் சீட் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

சமந்தா மார்க் ஷீட்:

நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபலமான இரு பள்ளியில் சமந்தா படித்து இருக்கிறார். அங்கு அவர் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணின் மார்க் ஷீட் தற்போது இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது. நடிப்பில் சிறந்து விளங்கி வரும் சமந்தா படிப்பிலும் சிறந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார். அதிலும் அந்த மார்க் லிஸ்டில் ‘சமந்தா பள்ளிக்கு கிடைத்த சொத்து’ என்று எழுதப்பட்டு இருக்கிறது.

Advertisement