நாக சைதன்யா குறித்து சமந்தா கூறி இருக்கும் தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார்.

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். சமீபத்தில் தான் இவர் குணமடைந்து மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருக்கிறார்.
சமந்தா திரைப்பயணம்:
இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருக்கிறார். இந்த வெப் சீரியஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸை எடுத்திருக்கிறார். இந்தத் தொடர் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி, முதல் அமேசான் OTT தளத்தில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ்ஸின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது சமந்தா பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் சமந்தா சொன்னது:
அதாவது, Citadel : Honey Bunny வெப் சீரிஸின் நிகழ்ச்சிக்காக அமேசான் பிரைமில் 'Spy-cy Rapid Fire With Samantha And Varun Dhawan' என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் வருணும், சமந்தாவும் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி கேள்வி கேட்டிருந்தார்கள். அப்போது வருண், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் அதிக செலவு செய்த விஷயம் என்ன? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சமந்தா, கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னுடைய எக்ஸ்க்கு நான் நிறைய விலைமதிப்பற்ற கிப்ட் கொடுத்து இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=PKMU_JPrjw4
சமந்தா சொன்ன பதில்:
உடனே வருண் தவான், எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, கொஞ்சம் அதிகமாகவே செய்து இருக்கிறேன் என்று சமந்தா கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நடிகை சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா திருமணம்:
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் நடக்க இருக்கிறது. இவர் நடிகை சோபிதாவை தான் திருமணம் செய்ய இருக்கிறார்.






