இந்த தேதியில், இந்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்வேன். பகிரங்கமாக அறிவித்த சமந்தா.

0
68204
samantha-with-baby
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன் பின்னர் விஜய், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து விட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை சமந்தா.

-விளம்பரம்-
Image result for samantha with baby"

தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா மகன் நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் கோலாகளமாக நடந்தது. நடிகை சமந்தா கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர், நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே, இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைப்பெற்றது.

இதையும் பாருங்க : குழந்தையுடன் இருக்கும் சினேகா. மேக்கப் இல்லாமலும் எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என்றானது. திருமணத்திற்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த மாதம் தனது இரண்டாவது ஆண்டு திருமணநாளை கொண்டாடினர். மேலும், நடிகை சமந்தா எப்போது குழந்தை பெற்றுக்கொள்வார் என்று அடிக்கடி அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கான பதிலை நடிகை சமந்தா தற்போது கூறியுள்ளார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை சமந்தா அடிக்கடி லைவ் சாட்டில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நடிகை சமந்தா இன்ஸ்டார்காம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர்கள் ஒருவர் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என்று என்று கேள்வியை கேட்டிருந்தார் .

-விளம்பரம்-

அதற்க்கு பதிலளித்த சமந்தா. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும், இதனை நக்கலாக சொன்னாரா இல்லை உண்மையில் தான் சொன்னாரா என்பது புரியவில்லை. இருப்பினும் நடிகை சமந்தா குறிப்பிட்ட ஆகஸ்ட் 7 ஆம் தேதி சமந்தாவின் பிறந்தநாளும் இல்லை அவரது கணவர் நாக சைதன்யாவின் பிறந்தநாளும் இல்லை. ஏற்கனேவே, நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியான போது அதற்கு ட்விட்டரில் பதில் அளித்த சமந்தா, நான் கர்ப்பமாக இருக்கனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள் என காமெடியாக பதில் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement