நாக சைதன்யா குறித்து சமந்தா போட்டு இருந்த பழைய பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதனிடையே நாக சைதன்யா- சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நாக சைதன்யா- சோபிதா துலிபாலா காதல்:
இதுவரை இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? என்று எந்த விவரம் தெரியவில்லை.
இவர்களின் விவாகரத்துக்கு பிறகு நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. சமீபத்தில் தான் நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது.

நாக சைதன்யா- சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்:
சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. கூடிய விரைவிலேயே இவர்களின் திருமண தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், வருகிற 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அல்லது இந்த ஆண்டு இறுதியிலும் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருமண தேதி குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேலும், திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் டெஸ்டினேஷன் வெட்டி நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நாக சைதன்யா திருமணம் குறித்த தகவல் :
ஏற்கனவே சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கோவாவில் தான் டெஸ்டினேஷன் வெட்டிங் நடந்தது. ஆனால், திருமணமான 4 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். தற்போது மீண்டும் டெஸ்டினேஷன் வெட்டிகை நாகசைதன்யா தேர்வு செய்திருப்பது சரி கிடையாது. அதனால் டெஸ்டினேஷன் திருமணம் வேண்டாம் என்றெல்லாம் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சமந்தா- நாக சைதன்யாவின் திருமணத்தின் போது எடுத்த பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
சமந்தா பதிவு:
அந்த வீடியோவில் நடிகை சமந்தா, நான் கனவு கண்டது போல உங்களால் வாழ்க்கை மாறுவதை என்னால் உணர முடிகிறது. எனக்குத் தெரிந்த மிகப்பெரிய மனிதர் என்றால் நீங்கள் தான். ஒரு நாள் நமக்கு அழகான குழந்தைக்கு நல்ல தந்தையாக நீங்கள் இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். எந்த உலகிலத்திலும், எந்த நிஜத்திலும் உங்களை எனக்காக தேர்ந்தெடுப்பேன் என்று பேசி இருந்தார். தற்போது இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்






