விவாகரத்து பின் அடுத்தடுத்து படங்கள், முக்கிய நகரத்தில் வீடு வாங்கிய சமந்தா. விலை மட்டும் இத்தனை கோடியாம்.

0
524
- Advertisement -

நடிகை சமந்தா அவர்கள் மும்பையில் சொந்த வீடு வாங்கியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இதனால் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

புஸ்பா படத்தில் சமந்தா:

மேலும், பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலின் மூலம் சமந்தா ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கவர்ந்தார் என்று சொல்லலாம். இதைத் தொடர்ந்து இவர் காத்துவாக்குல 2 காதல், திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

சாகுந்தலம் படம் பற்றிய தகவல்:

மேலும், சமீபத்தில் சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வருகிறது. அதோடு இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது. அதோடு வெளிவந்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா பிரம்மிக்க வைக்கும் அழகில் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து விட்டார்கள் என்றே கூறலாம். மேலும், இதுவரை கண்டிராத லுக்கில் சமந்தா இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

சமந்தா நடித்து வரும் படங்கள்:

இதனை தொடர்ந்து சமந்தா அவர்கள் யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படி தொடர்ந்து பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சமந்தா மும்பையில் சொந்த வீடு வாங்கி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே சமந்தா அவர்கள் ‛தி பேமிலி மேன்-2′ என்ற வெப்சீரிஸ் மூலம் இந்தி ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சமந்தா இந்தியில் அதிக படங்களில் நடிப்பதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

மும்பையில் சொந்த வீடு வாங்கிய சமந்தா:

இதனால் சமந்தா மும்பையில் வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சமந்தா அவர்கள் மும்பையிலேயே சொந்த வீடு வாங்கியுள்ளார். மும்பை கடற்கரை பகுதியில் 3 கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார். இதனால் ஹைதராபாத் அடுத்தபடியாக சமந்தா மும்பையில் குடியேற போகிறார் என்று கூறப்படுகிறது. தற்போது சமந்தா சொந்த வீடு வாங்கிய தகவல் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement