‘நீ ரொம்ப Cheapஆன நபர்’ – சகுந்தலம் படத்தை பிடிக்கவில்லை என்று சொன்னதால் சமந்தா செய்த செயல். திட்டி தீர்த்த ரசிகர்.

0
553
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் இவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதேபோல் சமீப காலமாக தெலுங்கு சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற நோய் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் யசோதா.

- Advertisement -

சாகுந்தலம் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருக்கிறார். சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம்.

படம் குறித்த விமர்சனம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளில் வெளியாகி இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. அது மட்டும் மேலும் இந்த படம் வெளியான முதல் நாளில் 5 கோடிக்கு மட்டும் வசூல் செய்து இருக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி இருக்கும். இந்த நிலையில் எதிர்பார்த்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை.

-விளம்பரம்-

சமந்தா செய்த செயல்:

அதே போல தெலுங்கு மாநிலங்களின் திரையரங்குகளில் ஒட்டுமொத்தமாக 32.60 சதவீதம் ஆக்கிரமிப்பைப் பெற்றிருந்த இந்த படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக வெறும் 5 கோடி தான் வசூல் செய்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் படம் குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்மறையாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர் ஒருவர், சமந்தாவின் சாகுந்தலம் படத்தை பார்த்து, நான் பார்த்ததிலேயே மோசமான படம். சமந்தா உங்கள் டப்பிங் படு கேவலமாக இருந்தது. உங்கள் ஓவர் ஆக்டிங்கை விட்டுவிடுங்கள் ‘ என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

விமர்சிக்கும் ரசிகர்:

இதை பார்த்த சமந்தா அவருடைய டீவ்ட் பேஜ்ஜை பிளாக் செய்து இருக்கிறார். இதை அந்த ரசிகர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, அவருடைய படம் சரியில்லை. எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னவுடன் அவர் என்னை பிளாக் செய்துவிட்டார். இது ரொம்ப கேவலமான செயல் என்று சமந்தாவை விமர்சித்து பதிவு செய்திருக்கிறார்.

Advertisement