தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை சமந்தா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் சமந்தாவுக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு வரவில்லை.

இந்நிலையில் தமிழில் 2018-ம் ஆண்டு விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட்டார்கள். பின் அங்கும் இந்த படம் நல்ல வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை தெலுங்கில் “ஜானு” என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தனும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்து உள்ளனர். தமிழில் 96 படத்தை எடுத்த பிரேம் குமார் தான் ஜானு படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது. தற்போது இந்த ஜானு திரைப்படம் தெலுங்கில் வெளியாகி உள்ளது.

Advertisement

இதையும் பாருங்க : ‘நான் தான் சின்னத்திரை நயன்தாரா டா’ஆர்வக்கோளாறில் ட்வீட் செய்து அவசர அவசரமாக டெலீட் செய்த நடிகை.

இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய ஜானு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று திருமலையில் பாத யாத்திரை மேற்கொண்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சமந்தா அவர்கள் ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்று திருப்பதி கோவிலில் பாத யாத்திரை செய்து உள்ளார். இப்படி சமந்தா தன் படத்திற்காக பாதை யாத்திரை செய்வதைக் கண்ட ரசிகர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

மேலும், செல்பி எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஜானு படம் வெற்றி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள் என்று சமந்தாவிற்கு தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். ஏன்னா, பெரும்பாலும் ரீமேக் படங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆகுது இல்லை. இதனால் தான் சமந்தா இந்த மாதிரி முயற்சியில் இறங்கி உள்ளார். சமந்தாவின் வேண்டுதல் ஏழுமலையான் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement