பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு தான் படம் இருக்கும் ஆனால், விஜயசாந்திக்கு பின்னர் ஒரு கதாநாயகிக்கு பட்ட பெயர் வைக்கப்பட்டது என்றால் அது நயன்தாராவிற்கு தான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நயன்தாராவிற்கு லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டமும்இருக்கிறது . ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குசமீபத்தில் நுழைந்துள்ள வாணி போஜன் தன்னைத்தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்துக் கொண்டு இருக்கிறார்.
சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.
தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவரை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பதும் உண்டு. ஆனால், இவரோ தன்னைத் தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு போட்ட பதிவு கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில் நடிகை வாணி போஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு ‘நான் தான் சின்னத்திரை நயன்தாரா டா’ என்று பதிவிட்டிருந்தார். ஆனால், பின்னர் ரசிகர்கள் கேலி செய்ய அவசர அவசரமாக அந்த பதிவை நீக்கிவிட்டார். இருப்பினும் அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் மட்டும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வாணி போஜன் தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் வாணி போஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.