இந்த ஆண்டின் படம் இது தான் – தமிழ் படம் குறித்து சொன்ன சமந்தா. குஷியில் ரசிகர்கள்.

0
445
samantha

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா இந்த ஆண்டின் சிறந்த படமாக ‘சூரரை போற்று’ படத்தை கூறியுள்ளார். சூர்யா நடிப்பில், இறுதி சுற்று சுதா இயக்கத்தில் கடந்த சில வாரத்திற்கு முன்னர் வெளியான சூரரை போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படம் OTT-யில் வெளியாகி இருந்தது. இருப்பினும் இந்த படம் திரையரங்களில் வெளியாகி வெற்றியடைந்து போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் படம், மிகவும் அருமையாக இருந்தது, சூர்யா, அபர்ணா, சுதா. இது போன்ற ஒரு ஊந்துதளை தான் எனக்கும் வேண்டும் என்று விரும்புகிறேன்.

-விளம்பரம்-
Advertisement