நாக சைதன்யாவுடன் ஒட்டு உறவில்லாமல் முடித்து கொண்டுள்ள சமந்தா – என்ன செய்துள்ளார் பாருங்க.

0
3518
samantha
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவை ஓபன் பண்ணாலே போதும் நாக சைதன்யா–சமந்தா விவாகரத்து விவகாரம் குறித்து தான் கொழுந்து விட்டு எரிகிறது. சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என பலரும் இவர்களுடைய விவாகரத்து குறித்து தான் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமந்தா செய்த செயல் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா.

-விளம்பரம்-
samantha

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார். நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடி என்றால் சமந்தா-நாகசைதன்யா தான் என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் திகழ்ந்து வந்தார்கள்.

- Advertisement -

பின் சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவருமே அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். மேலும், இவர்கள் பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி போன்ற இடங்களில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்கள்.

samantha

பின் சுற்றுலா பயணம் முடிந்து திரும்பிய பிறகு சமந்தா நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனிடையே சமந்தா எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் சமந்தா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு விஷயம் செய்துள்ளார். அது என்னவென்றால், சமந்தா அவர்கள் தனது இன்ஸ்டாகிராமில் இருந்த நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கியுள்ளார். அதுவும் 75-க்கும் மேலான நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கியுள்ளார். தற்போது ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே சமந்தாவின் இன்ஸ்டாகிராமில் காணப்படுகிறது. தற்போது இந்த புதிய அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement