'அது தற்போது இல்லை' - சமந்தாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து அவரின் தந்தை போட்ட உருக்கமான பதிவு.

By Rajkumar · 6/9/2022

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர்கள் நாக சைதன்யா சமந்தா ஜோடி 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி கடந்த 2ஆம் தேதி விவாக ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விஷயத்தில் நாகசைதன்யா விட சமந்தா தான் சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா விவாகரத்துக்கு பின்னர் தன்னுடைய நெருங்கிய தோழியுடன் ஹெலிகாப்டரில் ஆன்மீக பயணத்தை துவங்கி இருந்தார்.

விவகாரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது அம்மா கொடுத்த அட்வைஸ் குறித்துபதிவிட்டு இருந்தார். அதில், தற்போது நீ என்னவாக இருக்கிறாயோ அதை நினைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இரு. நாளை நீ என்னவாக ஆக வேண்டுமோ அதற்காக போராடிக் கொண்டே இரு' என்று தன் அம்மா சொன்னதாகபதிவிட்டு இருந்தார். சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைத்னயா நடிகையுடன் காதலில் இருப்பதாக கிசுகிசு கூட வெளியானது.

இதையும் பாருங்க : திருப்பதியில் சிபாரிசு கடிதம் கொடுத்த VIP டிக்கெட் - தர மறுத்த அதிகாரிகளிடம் தகராறு செய்த நடிகை. வைரலாகும் வீடியோ.

ஆனால், அது முற்றிலும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. அதே போல நாக சைதன்யா விவாகரத்து பின் அது குறித்து பெரிதாக பேசுவதில்லை. ஆனால், சமந்தா மட்டும் தொடர்ந்து தன் திருமண வாழ்கை குறித்து பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் தந்தை தனது சமூக வலைதள பக்கத்தில் சமந்தாவின் திருமண புகைப்படங்களையும் மேலும் சில புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் அந்த பதிவில் "நீண்ட காலத்திற்கு முன்பு; ஒரு கதை இருந்தது; அது தற்போது இல்லை!! அதனால் நாம் புது கதையை, அத்தியாயத்தை தொடங்கலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.ஏற்கனவே சமந்தாவின் விவாகரத்துக்கு பின் பேசிய அவரின் தந்தை, சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து விஷயத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இவர்களுடைய திருமண தகராறு குறித்து எனக்கு ஏற்கனவே தெரியும்.

இந்த நிலைமை சீராகி விடும் என்று நம்பினேன். ஆனால், அப்படி நடக்கவே இல்லை. இவர்களுக்கிடையே இருந்த பிரச்சினை நாட்கள் செல்லச் செல்ல முற்றிவிட்டது.என் மகள் எந்த முடிவெடுத்தாலும் தெளிவாகத்தான் எடுப்பார். அதேபோல் இந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நிறைய முறை யோசித்து இருப்பார் என்று நான் நம்புகிறேன். என் மகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

விவகாரத்துக்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடித்து இருந்தார். அடுத்தடுத்து தெலுங்கில் இரண்டு படத்திலும் இந்தியில் ஒரு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full