திருப்பதியில் சிபாரிசு கடிதம் கொடுத்த VIP டிக்கெட் – தர மறுத்த அதிகாரிகளிடம் தகராறு செய்த நடிகை. வைரலாகும் வீடியோ.

0
300
archanagautham
- Advertisement -

திருப்பதி கோயிலில் தகாத முறையில் ஊழியர்கள் நடந்து கொண்டதாக நடிகை அர்ச்சனா கௌதம் அளித்து இருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான நடிகை அர்ச்சனா கௌதம். இவர் மிஸ் பிகினி 2018, மிஸ் உத்தர பிரதேசம் 2014 மற்றும் மிஸ் காஸ்மோ வேர்ல்ட் 2018 ஆகிய பட்டங்களை வென்று இருக்கிறார். பின் இவர் உத்திரபிரதேசம் மாநிலம் அஸ்தினாபூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் திருப்பதி கோவிலில் தன்னிடம் தகாத முறையில் ஊழியர்கள் பேசி இருக்கிறார்கள் என்று நடிகை அர்ச்சனா கௌதம் அளித்து இருக்கும் புகார் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பதி கோவிலில் எப்போதுமே கூட்டம் இருப்பது வழக்கமான ஒன்று தான். இந்தியாவிலேயே பணக்கார கோவில்களில் ஒன்று திருப்பதி. இதனால் சாதாரண மக்கள் தொடங்கி பிரபலங்கள் பலரும் திருப்பதி கோவிலுக்கு செல்வது வழக்கம்.

- Advertisement -

திருப்பதி சென்ற அர்ச்சனா கவுதம்:

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் அர்ச்சனா கௌதமும் சாமி ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த 1 ஆம் தேதி சென்றிருக்கிறார். அப்போது தலைமை செயல் அதிகாரி அலுவலகத்தில் தன்னுடைய சிபாரிசு கடிதம் மூலம் விஐபி டிக்கெட் பெற அர்ச்சனா கௌதம் முயன்று இருக்கிறார். ஆனால், அங்கு இருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது.

அர்ச்சனா கவுதம்-திருப்பதி ஊழியர்கள் பிரச்சனை:

மேலும், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம் நன்கொடை வழங்கிய பிறகு விஐபி டிக்கெட் ரூ. 500 பெற்றுக் கொள்ளலாம் என அங்குள்ள ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் அர்ச்சனா கவுதம் அங்கு இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். பின் அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவை திட்டி இருக்கிறார்கள். இதனை அடுத்து திருப்பதியில் ஊழியர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி அலுவலகத்தில் இருந்தபடியே வீடியோ செல்பி வீடியோ எடுத்து டீவ்ட்டர் பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அர்ச்சனா கவுதம் பதிவிட்ட வீடியோ:

அதில் அவர், இந்து மத ஸ்தலங்கள் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது. மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். அது மட்டும் இல்லாமல் விஐபி தரிசனம் என்ற பெயரில் 10,500 கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். இப்படி இவர் பதிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement