அட கொடுமையே ’ஐஸ் பாத் தெரபி’ எடுக்கும் சமந்தா – எதற்காக இந்த சிகிச்சை எடுக்கப்படுகிறது தெரியுமா ?

0
357
samantha
- Advertisement -

சமந்தா எடுத்து வரும் ஐஸ் பாத் தெரப்பி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.சமந்தா எடுத்து வரும் ஐஸ் பாத் தெரப்பி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

பின் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு இடையில் Myositis என்னும் Autoimmune என்ற நோய் தாக்கி சிகிக்சை பெற்று இருந்தார். இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருந்தாலும், இவர் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் யசோதா.

- Advertisement -

சமந்தா நடித்த படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சாகுந்தலம். இந்த படத்தை குணசேகர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன், அதிதிபாலன், கவுதமி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருக்கிறார். சகுந்தலா மற்றும் துஷ்யந்தின் நித்திய காதல் கதை தான் சாகுந்தலம்.

சாகுந்தலம் படம்:

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பழமொழிகளில் வெளியாகி இருக்கிறது. ஆனால், படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இந்த படத்தின் பட்ஜெட் 65 லிருந்து 70 கோடி. ஆனால், எதிர்பார்த்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யவில்லை. மேலும் இந்த படம் படு தோல்வி அடைந்தது சமந்தாவிற்கு மன வருத்தத்தை அளித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா பல பேட்டிகள் அளித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமந்தா எடுக்கும் சிகிச்சை:

அப்போது அவருடைய உடல் நலம் குறித்தும் கூறியிருந்தார். ஒரு பக்கம் சமந்தா நோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தாலும் இன்னொரு பக்கம் உடற்பயிற்சி, திரைப்படங்கள் என்று பிசியாகவே இருக்கிறார். தற்போது இவர் குஷி, சிட்டாடல் சீரிஸ்-இன் இந்தியன் வெர்ஷனில் நடிக்கிறார். மேலும், இந்த சீரிஸில் நடிப்பதற்காக இவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே கொடிய நோயால் சமந்தா பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தீவிரமான உடற்பயிற்சி பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐஸ் பாத் தெரப்பி:

இந்த நிலையில் அதிலிருந்து விரைவில் குணமாக சமந்தா ஐஸ் பாத் தெரபி எடுத்திருக்கிறார். அதாவது, குளியல் தொட்டி முழுவதும் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதில் சமந்தா இருக்கிறார். இது தசை சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் சில ஆட்டோ இம்யூன் குறைபாடுகளுக்கு ஐஸ் கட்டிகள் பயன்படுத்தி உறைய வைக்கும் கிரையோ தெரபி. இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க குளிர் தண்ணீரில் குளித்தல் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த ஜில்லு தண்ணியில் மூழ்கி இருப்பதும் ஒரு வகையான தெரபியாகும். 10 நிமிடங்கள் வரை இந்த ஐஸ் பாத் எடுத்துக் கொண்டால் மட்டுமே இந்த நோயிலிருந்து சீக்கிரமாக குணமாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement