ஓ பேபி படத்தின் வெற்றியால் சம்பளத்தை கூட்டிய சம்மு.! எத்தனை கோடி தெரியுமா.!

0
1573
Samantha
- Advertisement -

நடிகை சமந்தா தற்போது பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரகஸ்தலம்’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. மேலும், தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிய போதும் சமந்தாவின் நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா, இந்நிலையில் தற்போது கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி என்ற படத்தை தழுவிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா.

இதையும் பாருங்க : அச்சு அசலாக முகென் போலவே இருக்கும் அவரது சகோதரர்.! வைரலாகும் குடும்ப புகைப்படம்.! 

- Advertisement -

ஓ பேபி என்ற பெயரில் வெளியான இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு பின்னர் சமந்தா தனது சம்பளத்தை இரட்டிப்பாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமே இந்த படம் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளதாம். இந்த படம் அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் வசூல் செய்துள்ளதாம். இதனால் தனது மார்க்கெட்டை அணிந்துள்ள சமந்தா தற்போது தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியுள்ளார். இதற்கு முன்பாக ஒரு படத்திற்கு 1.5 கோடி முதல் 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement