ஜிம்மில் கடின உடற் பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சமந்தா. இப்படி ஒன்னு இருக்கா?

0
39430
samantha
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன் பின்னர் விஜய், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து விட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் நடிகை சமந்தா. நடிகை சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகை நாகசைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-
View this post on Instagram

#samantha Latest Workout Video

A post shared by Behind Talkies (@behindtalkies) on

திருமணத்திற்கும் பின்னரும் தொடந்து நடித்து வருக்குகிறார் நடிகை சமந்தா. இறுதியாக இவர் நடித்த ‘சீமராஜா, யூ டர்ன் போன்ற படங்கள் அம்மணிக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் இவர் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ்’ படமும் அம்மணிக்கு தோல்விப் படங்களாகவே அமைந்திருந்தது. மேலும், திருமணம் நடந்த பின்பும் திரைப்படத்தில் தடையில்லாமல் நடித்து வரும் சமந்தா கவர்ச்சியிலும் தடையில்லாமல் இருந்து வருகிறார். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா.

இதையும் பாருங்க : கத்தி படத்தில் நடித்த இந்த நடிகர் என்னவானார் தெரியுமா. இவர் இவ்வளவு பெரிய ஆளா ?

- Advertisement -

சமீபத்தில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் நடித்த மஜிலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவிற்கு வசூலையும் பெற்றது. மேலும், சமந்தா லீட் ரோலில் நடித்த ‘ஒத் பேபி’ என்ற திரைப்படமும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்தது. திருமணம் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் குழந்தை பெறாமல் இருந்து வருகிறார் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தனது உடலை மிகவும் பிட்டாக வைத்து வருகிறார். இதனால் சமந்தா தற்போது தீவிர உடற்பயிற்சியில் இருந்து வருகின்றார், அவ்வபோது புகைப்படங்களையும் வெளியிடுவார். அந்த வகையில் சம்பீத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக இருக்கும் சமந்தாவை அவரது ரசிகர்களே ட்ரோல் செய்துவந்தனர்.

Image result for samantha gym images"

ஆனால், அப்போதும் அம்மணி அடங்குவதாக இல்லை. மேலும், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பெரும்பாலான நேரத்தை ஜிம்மில் தான் செலவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமந்தா, ஜிம்மில் உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தம்புள்சை வைத்து வித்யாசமான உடற் பயிற்சயில் ஈடுபட்டுள்ளார் சமந்தா. இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement