வர வர பொம்பள மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆகிட்டு வரீங்க – ரசிகர்களின் கேலிக்கு உள்ளான சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்

0
204
- Advertisement -

எல்லை மீறிய கவர்ச்சியில் அட்டைப்படத்திற்கு சமந்தா கொடுத்திருக்கும் போஸ் தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. அதிலும் இவர் லீட் ரோலில் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை.

-விளம்பரம்-

குறிப்பாக இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால், சமீபத்தில் விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்த படம் குஷி. காதல் ஆக்ஷன் திரைப்படமாக உருவான இந்த படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இதனிடைய சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

சமந்தா குறித்த தகவல்:

இவர்கள் இருவரும் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். விவாகரத்திற்கு பிறகு சமந்தா தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

மயோசிடிஸ் நோய்:

இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரண குணமடையவில்லை. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சமந்தா உடல்நிலை:

பின் சமந்தா தீவிரமாக சிகிச்சை எடுத்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு மன நிம்மதிக்காக சமந்தா சுற்றுப்பயணம் சென்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த சமந்தா அவர்கள் தற்போது பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறார். மீண்டும் இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சமந்தா லேட்டஸ்ட் போஸ்:

மேலும், பாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு சமந்தா ஆர்வமாக காட்டியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஸ்டன்னிங் கவர்ச்சியில் ஃபெமினா இந்தியா புத்தகத்தின் அட்டைப் படத்திற்கு சமந்தா போஸ் கொடுத்திருக்கிறார். அதில் அவர் மிக கவர்ச்சியாகவும் ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இருந்தாலும், சிலர் விமர்சித்தும் மைக்கேல் ஜாக்சன் மாறி சமந்தா வராங்க என்றெல்லாம் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Advertisement