‘வாழ்த்துக்கள் பாப்பா’ – சின்மயி துவங்கிய புதிய கடையை திறந்து வைத்த சமந்தா. கலக்கல் புகைப்படங்கள் இதோ.

0
469
samantha
- Advertisement -

பிரபல பின்னணி பாடகியான சின்மயி திறந்துள்ள புதிய கடையை சமந்தா திறந்து வைத்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்து இருந்தார். விவகாரத்தை அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்ன தான் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார் சமந்தா. ஆனால், விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

-விளம்பரம்-

விவாகரத்துக்கு பின் கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். சமீபத்தில் கூட காத்து வாக்குல ரெண்டு காதல் செட்டில் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கூட சமந்தா பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் சின்மயி, சென்னையில் deepskindialogues என்ற புதிய spa ஒன்றை துவங்கி இருக்கிறார். இதனை நடிகை சமந்தா நேரில் வந்து திறந்து வைத்தார்.

- Advertisement -

இதுகுறித்து பதிவிட்டுள்ள சமந்தா, உன்னுடைய அனைத்து சாதனைகளையும் கொண்டாடுவதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ‘deepskindialogues’ மிகவும் அருமையாக இருக்கப் போகிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை வாழ்த்துக்கள் பாப்பா என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த spaவில் Sculpting எனப்படும் சிகிச்சைகளும் ஹாலிவுட் தரத்தில் அளிக்கப்படும் என்றும் சமந்தா பதிவிட்டுள்ளார்.

சமந்தா மற்றும் சின்மயி இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகள் என்பது பலரும் அறியாத விஷயம். சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கத்தில் நாகர்ஜுனா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்த ‘ மன்மதடு 2 ‘ படத்தில் சமந்தா கவுரவ தோற்றத்தில் கூட நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement